Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ.. டெஸ்ட் அணியில் 4 புதிய முகம்.. யாருக்கு வாய்ப்பு?

இந்திய டெஸ்ட் அணி வரும் ஜூலை 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது 2023 -25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி ஆகும்.

இந்திய டெஸ்ட் அணியில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். குறிப்பாக கீழ் வரிசை வீரர்கள் தான் பேட்டிங்கில் ரன் சேர்த்து இந்திய அணியை காப்பாற்றி வருகிறார்கள். பேட்டிங் மிகப்பெரிய குறையாகவே இந்திய அணிக்கு மாறிவிட்டது.

4 Youngsters might get chance to feature in india vs west indies series

இதனை கருத்தில் கொண்டு முற்றிலும் இளம் அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சீனியாரிட்டி அடிப்படையில் தாக்கு பிடிக்கலாம். ஆனால் புஜாராவுக்கு பிசிசிஐ கல்தா வழங்கலாம் என தெரிகிறது. மேலும் இந்த அணியில் நான்கு புது முகங்களை தேர்வு செய்து அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அதன்படி இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஜெய்ஸ்வால். இந்திய அணியின் அடுத்த இளம் நட்சத்திர வீரர் என்ற பெயரை எடுத்திருப்பவர் ஜெய்ஸ்வால். அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். ரஞ்சி கிரிக்கெட்டில் முக்கிய ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். இதனால் ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்பிராஸ் கான். பிராட் மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் என பெருமையை அவர் பெற்றிருக்கிறார். சர்பிராஸ் கானுக்கு பிசிசிஐ இதுவரை எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹனுமா விகாரி. ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களும் அதிரடியாக ஆடக்கூடிய இந்த தருணத்தில் ஹனுமா விகாரி பொறுமையாக விளையாடி தனக்கென ஒரு பெயர் வாங்கி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இருக்கும் ஹனுமா விகாரியை சேர்க்காமல் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு வழங்கியது அநியாயத்தின் உச்சமாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் ஹனுமா விகாரிக்கு வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடியவர் அபிமன்யு ஈஸ்வரன். பெங்கால் அணிக்காக விளையாடக்கூடிய அபிமன்யு ஈஸ்வரன் இந்திய ஏ அணி உள்ளூர் டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். 27 வயதான அபிமன்யு வாய்ப்புக்காக பல ஆண்டு காத்திருந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

Story first published: Wednesday, June 14, 2023, 12:39 [IST]
Other articles published on Jun 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+