Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் பார்க்க முடியாதுன்னா அப்படி ஒரு ஹனிமூனே வேணாம்.. உலகை தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்!

Recommended Video

ஹனிமூன் முக்கியமா ? கிரிக்கெட்டா ? இந்திய ரசிகர்கள் கொடுத்த பதில்

டெல்லி : சமீபத்தில் இந்திய விளையாட்டு ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.

அதில் 42 சதவீத இந்திய ரசிகர்கள் ஹனிமூன் சமயத்தில் தங்களுக்கு விருப்பமான அணி அல்லது வீரர் ஆடும் இறுதிப் போட்டி வந்தால், நிச்சயம் ஹனிமூனை ரத்து செய்து விடுவோம் எனக் கூறி உள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் ரசிகர்கள்

இந்திய விளையாட்டு ரசிகர்கள் என்றாலே பெரும்பாலும் அது கிரிக்கெட் ரசிகர்கள் தான். இந்த சர்வேயிலும் கிரிக்கெட் ரசிகர்களே பெரும்பாலும் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் தான் இப்படி ஒரு வியப்பை ஏற்படுத்தும் பதிலை கூறி உள்ளனர்.

சுவாரசிய முடிவுகள்

சுவாரசிய முடிவுகள்

இந்த கருத்துக் கணிப்பில் பல சுவாரசிய முடிவுகள் கிடைத்துள்ளன. 44 சதவீத இந்திய ரசிகர்கள் அடுத்த ஆண்டில் தங்களுக்கு பிடித்த அணி அல்லது வீரர் பெரிய பட்டம் ஒன்றை வெல்ல வாய்ப்புள்ளது என நம்புகின்றனர்.

கிரிக்கெட் தான் அதிகம்

கிரிக்கெட் தான் அதிகம்

உலக அளவில் 34 சதவீத ரசிகர்களே இப்படி நினைக்கின்றனர். இதில் பெரும்பாலும் கிரிக்கெட் ரசிகர்களே இப்படி சாதகமாக நினைத்துள்ளனர். கால்பந்து ரசிகர்கள் இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளனர்.

வேலையை விடுவோம்

வேலையை விடுவோம்

41 சதவீத ரசிகர்கள் தங்கள் அணி அல்லது வீரர் ஆடும் இறுதிப் போட்டி ஒன்றை பார்ப்பதற்காக வேலையை கூட துறக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளனர். இதிலும் பெரும்பாலனவர்கள் கிரிக்கெட் ரசிகர்களே!

ஹனிமூனை ரத்து செய்வீர்களா?

ஹனிமூனை ரத்து செய்வீர்களா?

உங்களுக்கு பிடித்த அணி அல்லது வீரர் ஆடும் முக்கிய போட்டி ஒன்றை பார்க்க ஹனிமூனை ரத்து செய்வீர்களா? என்ற கேள்விக்கு உலக அளவில் 19 சதவீத ரசிகர்கள் மட்டுமே ஆம் எனக் கூறி உள்ளனர்.

இந்தியா தான் டாப்பு

இந்தியா தான் டாப்பு

அதே சமயம், 42 சதவீதம் இந்திய ரசிகர்கள் ஹனிமூனை ரத்து செய்துவிட்டு, முக்கியமான போட்டியைத் தான் பார்ப்போம் எனக் கூறி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ?

Story first published: Saturday, November 30, 2019, 10:54 [IST]
Other articles published on Nov 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+