45 வயதில் 190 ரன்கள்.. 15 சிக்ஸ்.. விளாசிய "ஆல் ரவுண்டர்" - 9வது விக்கெட்டுக்கு மெகா "ரெக்கார்ட்"

இங்கிலாந்து: வீரனுக்கு என்றுமே வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை இந்த தரமான சம்பவம் நினைவுப்படுத்தியுள்ளது. யப்பா என்னா அடி!.

45வயதில் Darren Stevens 9th wicketக்கு மெகா 'Record' | Oneindia Tamil

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் இருந்தாலும், இந்தியா அளவுக்கு உச்சத்தில் இல்லை. இந்தியா அளவுக்கு இப்போது உலகில் வேறு எந்த நாடும் பாதிக்கப்படவில்லை.

கணவரை பறித்த கொரோனா.. கையில் 5 மாத குழந்தை.. கணவரை பறித்த கொரோனா.. கையில் 5 மாத குழந்தை..

இதனால், அங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. வீரர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி விளையாடி வருகின்றனர். (அப்படியே ஐபிஎல் 2021-ஐ அங்க நடத்த வழி இருக்கானு சொல்லுங்க ராசா).

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

இங்கிலாந்தின் County Championship 2021 தொடரில், கெண்ட் அணியும் கிளாமோர்கன் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கெண்ட் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒருக்கட்டத்தில் 72-2 என்ற நிலையில் இருந்து, 128- 8 என்று அதலபாதாளத்திற்கு சென்றது.

பறந்த சிக்ஸர்கள்

பறந்த சிக்ஸர்கள்

மேட்ச் இன்னும் 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என்று அனைவரும் கணக்கு போட, 7வது வீரராக களமிறங்கிய 45 வயதான ஆல்-ரவுண்டர் டேரன் ஸ்டீவன்ஸ், 'இனி வேலைக்கு ஆகாது' என்று கியரை மாற்ற ஆரம்பித்தார். எதிர் திசையில் நின்றது மிகல் கம்மின்ஸ் எனும் பவுலர். சும்மா சிக்ஸர்களும், பவுண்டரிகளும் ஸ்டீவன்ஸ் பேட்டிங்கில் இருந்து தெறிக்க ஆரம்பித்தன.

15 சிக்ஸர்கள்

15 சிக்ஸர்கள்

ஸ்பின், ஃபாஸ்ட் என்று அனைத்து பவுலர்களின் பந்துகளும், அவரது பேட்டில் பட்டு பெவிலியனுக்கு வீறுநடை போட்டு திரும்பிக் கொண்டிருந்தன. 149 பந்துகளில் 190 ரன்கள். இதில் 15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் அடக்கம். அப்படியே எதிரணி பவுலர்களும் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஸ்டிரைக் ரேட் 127.52

நம்ப முடியாத வயது

நம்ப முடியாத வயது

9வது விக்கெட்டுக்கு டேரன் ஸ்டீவன்ஸ் - மிகல் கம்மின்ஸ் ஜோடி அடித்த ரன்கள் 166 ரன்கள். இதில் கம்மின்ஸ் மட்டும் அடித்தது 1 ரன். 45 வயதான பேட்ஸ்மேன் என்று கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்தாலும், யாரும் நம்பமாட்டார்கள் அவரது சிக்ஸர்களைப் பார்த்தால். இங்கே, பலரும் 32 வயதில், 'முடியலப்பா' என்று முனங்கிவிடுவது நிச்சயம் சாபக்கேடு தான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
45 year old Darren Stevens smash 190 runs - டேரன் ஸ்டீவன்ஸ்
Story first published: Saturday, May 22, 2021, 11:59 [IST]
Other articles published on May 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X