சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே.. அதிக முறை பைனல் சென்ற அணி இந்தியா!
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிக முறை பைனலுக்குள் சென்ற அணி இந்தியாதான்.
இன்றைய அரையிறுதியில் வங்கதேசத்தை ஊதி தள்ளி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா. முன்னதாக 2000மாவது ஆண்டு பைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா. அப்போது நியூசிலாந்துடன் மோதியது.

2002ல் இலங்கைக்கு எதிராக இறுதி போட்டியில் களம் கண்டது இந்தியா. 2013ல் இங்கிலாந்துக்கு எதிராக களம் கண்டது இந்தியா. இந்த வருடம் பைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.
மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் பெரிய ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபியில் 4 முறை பைனலுக்கு சென்ற ஒரே அணி இந்தியாதான்.
Story first published: Thursday, June 15, 2017, 22:15 [IST]
Other articles published on Jun 15, 2017


Click it and Unblock the Notifications