
இந்தியா முதல் நாள்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 155 ரன்கள் எடுத்தார்.

இலங்கை முதல் இன்னிங்ஸ்
முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. தவான் 67 ரன்களும், கோஹ்லி, ரோஹித் தலா 50 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. இலங்கையை எளிதாக விக்கெட் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மிகவும் விரைவாக இந்தியா டிக்ளேர் செய்துள்ளது.

இலங்கை பேட்டிங்
இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே திணறியது. இந்திய பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினார்கள். பவுலரான லக்மலை சீக்கிரமே இறக்கிவிட்டார்கள். ஆனாலும் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது இலங்கை 31 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா இரண்டு விக்கெட் எடுத்தார்.


Click it and Unblock the Notifications











