இலங்கையை துவம்சம் செய்த இந்தியா... 2வது டெஸ்ட்டில் அதிரடியாக இன்னிங்ஸ் வெற்றி
நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய பவுலர்கள் முதல் நாள் கலக்கினார்கள். அதன்பின் களம் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டு நாளாக போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் 405 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றள்ளது.

இலங்கை சுருண்டது
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் இருந்து பேட்டிங்கில் இலங்கை அணி சொதப்பியது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பெஸ்ட் பேட்டிங்
முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி பேட்டிங்கிலும் மாஸ் காட்டியது. முரளி விஜய் அதிரடியாக ஆடி 128 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முரளி விஜய்க்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த புஜாரா 143 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரோஹித் சர்மாவும் மிகவும் சிறப்பாக ஆடி 160 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். முதல் ஐந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுப்பதற்குள் இலங்கை பவுலர்கள் படாதபாடு பட்டுவிட்டனர்.

சாதனை மன்னன் கோஹ்லி
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து கோஹ்லி மிகவும் சிறப்பாக ஆடினார். கோஹ்லி மட்டுமே தனி ஆளாக இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அதிகமாக எடுத்தார். மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி 260 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 5வது இரட்டை சதம் ஆகும். 213 ரன்கள் எடுத்து இருந்த போது கோஹ்லி அவுட் ஆனார். இந்த நிலையில் இந்திய அணி வீரர்களின் அதிரடியால் இந்தியா 610 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் டிக்ளேர் செய்தது.

இலங்கை கதை முடிந்தது
இந்த இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும். இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய போது இலங்கை இந்தியாவை விட 405 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஆரம்பத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இன்று காலையில் இருந்து வந்த வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள். 2 மணி நேரத்தில் இலங்கை 8 விக்கெட்டை இழந்தது. இலங்கை இன்னும் பத்து வீரர்களை அணியில் சேர்த்து விளையாடினாலும் நாங்கள் விக்கெட் எடுப்போம் என்ற அளவுக்கு இந்திய பவுலிங் இருந்தது.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
இந்த நிலையில் இந்த இன்னிங்ஸிலும் அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த நிலையில் இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மேலும் ஒருதடவை கூட இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோற்றது இல்லை என்ற சாதனையையும் தக்க வைத்துக் கொண்டது.


Click it and Unblock the Notifications