Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பிய பேட்டிங்.. தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா.. இந்தியாவை வீழ்த்தியது

கேப் டவுன்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. நேற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

நேற்று ஒரு ஓவர் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 130 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பும்ரா, ஷமி தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.

டாஸ் வென்றனர்

டாஸ் வென்றனர்

இதில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அவர்களின் பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்து இருக்கிறது. புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மற்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஏ பி டிவில்லியர்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். அஸ்வின் குறைந்த ஓவர்களே வீசினார்.

பேட்டிங் மோசம்

பேட்டிங் மோசம்

இந்தியா அணியின் தென்னாப்பிரிக்காவை விட மோசமாக பேட்டிங் செய்தது. முரளி விஜய், தவான், கோஹ்லி, ரோகித் ஷர்மா, புஜாரா, அஸ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கோஹ்லி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாண்டியா 95 பந்துகளில் 14 பவுண்டரிகள், 1 சிக்சர் உதவியோடு 93 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்தியா 209 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்தியா பவுலிங்

இந்தியா பவுலிங்

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. நேற்று காலையில் கேப் டவுனில் பெய்தது. இதனால் முதலில் பாதி ஆட்டம் கைவிடப்பட்டது. பின் 7 மணியளவில் மொத்த 3வது நாள் போட்டியும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அடுத்தடுத்து அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

திரில்

திரில்

இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. ஆனாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதன்பின் களமிறங்கிய இந்தியா வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். எல்லா வீரரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்த நிலையில் இந்தியா 10 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Monday, January 8, 2018, 20:37 [IST]
Other articles published on Jan 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+