Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆறே போட்டி... 4வது ஐந்து விக்கெட்... கைல் ஜேமீசனின் இமாலய சாதனை!

ஹாக்லி ஓவல் : நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பௌலர் கைல் ஜேமீசன் சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார்.

கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்துள்ளார் ஜேமீசன்.

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் இரு போட்டிகளிலும் முறையே சதம் மற்றும் இரட்டை சதத்தை அடித்துள்ளார்.

16 விக்கெட்டுகள்

16 விக்கெட்டுகள்

இந்நிலையில் இந்த இரு போட்டிகளிலும் சேர்த்து அணியின் பௌலர் கைல் ஜேமீசன், 16 விக்கெட்டுகளையும் 62 ரன்களையும் அடித்துள்ளார். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டில் முதல் டெஸ்ட்

கடந்த ஆண்டில் முதல் டெஸ்ட்

சொந்த மண்ணில் இவருடைய பௌலிங் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இந்தியாவிற்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை ஜேமீசன் ஆடினார். ஆனால் அதற்குள்ளாகவே ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி மற்றும் வாக்னர் ஆகியோருக்கு இணையாக இவருடைய ஆட்டமும் பாராட்டப்பட்டு வருகிறது.

4வது 5 விக்கெட்டுகள் சாதனை

4வது 5 விக்கெட்டுகள் சாதனை

கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் இவர் தனது 4வது 5 விக்கெட்டுகள் சாதனையை செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக ஒன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு என இவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார். மேலும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் இதுவரை 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Wednesday, January 6, 2021, 12:23 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+