Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனை நாயகன் டோணிக்கு இன்று ஸ்பெஷல் டே! #dhoni300

சென்னை : இலங்கை - இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் போட்டியானது, டோணியின் 300வது ஒரு நாள் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்தியா வெற்றிகரமாக விளையாடி வருகிறது. அதன்படி 3-0 என்ற தொடர் வெற்றிகள் மூலம் கோப்பையை வசப்படுத்தியுள்ளது இந்தியா.

கொழும்பின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ள 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ்ஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டாலும் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டோணிக்கு 300

டோணிக்கு 300

இதற்குக் காரணம் முன்னாள் கேப்டன் டோணிக்கு இது 300வது ஒரு நாள் போட்டி. இந்த போட்டியில் தனது 300வது ஒரு நாள் போட்டியை டோணி நிறைவு செய்கிறார். இதனால் ரசிகர்கள் அவருடைய விளையாட்டு இந்தப் போட்டியில் எப்படி அமையப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 6வது வீரர்

6வது வீரர்

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில், 300-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நிறைவு செய்யும் 6-வது வீரராகவும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் 20வது வீரராகவும் டோணி திகழ்கிறார். இதற்கு முன்னர் முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளிலும், ராகுல் ட்ராவிட் 344, அசாருதீன் 334, கங்குலி 311, யுவராஜ் சிங் 304 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

 சாதனை நாயகன்

சாதனை நாயகன்

இந்த வரிசையில் 300-வது போட்டியை டோணி நிறைவு செய்கிறார். இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 74 அரை சதங்களையும், 72 நாட் அவுட்களையும் டோணி கண்டுள்ளார். டோணி விக்கெட் கீப்பராக இருந்த போது 278 கேட்சுகள், 99 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 299 ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 9 ஆயிரத்து 608 ரன்களையும், 10 சதங்களையும் சாதனையாக வைத்துள்ளார் டோணி.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்நிலையில் இன்றைய 300-வது ஒருநாள் ஆட்டத்தின் போது 100-வது ஸ்டம்பிங்கை தோனி கைப்பற்றுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகளில், இரண்டு போட்டிகளின் வெற்றியில் தோனி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Story first published: Thursday, August 31, 2017, 15:10 [IST]
Other articles published on Aug 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+