Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் டோணியின் 'ராஞ்சி'யில் இன்று 4வது ஒருநாள் போட்டி- பதிலடி கொடுக்குமா இந்தியா?

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

பெய்லி தலைமையிலான ஆஸ்திேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 7 ஒருநாள் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்னில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று முன்தினம் நடந்த 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டில் வெற்றியை பெற்றது.

இதன்மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெர உள்ளது.

பதிலடி கொடுக்குமா?

பதிலடி கொடுக்குமா?

3-வது போட்டியில் தோற்றதற்கு இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இஷாந்தை கழட்டிவிடமாட்டாங்களா?

இஷாந்தை கழட்டிவிடமாட்டாங்களா?

303 ரன் குவித்தும் தோல்வி அடைந்ததற்கு மோசமான பந்துவீச்சே காரணமாகும். 48-வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா 30 ரன்களை கொடுத்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றாலும் தேர்வுக்குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது ஆச்சரியமே.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

இஷாந்த் சர்மா நீக்கப்பட்டால் முகமது சமி அல்லது ஜெய்தேவ் உன்கட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க இயலும்.

வலுவான ஆஸ்திரேலியா

வலுவான ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி தற்போது பலம் பொருந்தியதாக உள்ளது. கடந்த போட்டியில் பல்க்னெரின் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. கேப்டன் பெய்லி, ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், வாட்சன், வோக்ஸ், ஜான்சன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

விறுவிறு எதிர்பார்ப்பு

விறுவிறு எதிர்பார்ப்பு

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 23, 2013, 9:52 [IST]
Other articles published on Oct 23, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+