For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

By Mathi

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணி முன்னிலை

இந்திய அணி முன்னிலை

கார்டிப்பில் நடந்த 2-வது ஆட்டத்தில் 133 ரன்கள் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

4வது ஒருநாள் போட்டி

4வது ஒருநாள் போட்டி

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

குல்கர்னி

குல்கர்னி

இந்திய அணியில் காயமடைந்த மொகித் ஷர்மாவுக்கு பதிலாக குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பயிற்சியின் போது காயம் அடைந்த இயான் பெல்லுக்கு பதிலாக காரி சேர்க்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுமே மும்முரம்

இரு அணிகளுமே மும்முரம்

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணி கடும் முனைப்புடன் செயல்படும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும் என்பதால் இங்கிலாந்து அணி வெற்றிக்காக அனைத்து வகையிலும் போராடும்.

Story first published: Tuesday, September 2, 2014, 16:12 [IST]
Other articles published on Sep 2, 2014
English summary
India captain Mahendra Singh Dhoni won the toss and elected to bowl against England in the fourth One-Day International (ODI) of the five-match series being played at Edgbaston here Tuesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+