Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!!

ஹாமில்டன்: 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

3-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 314 ரன்கள் குவித்த ஆட்டம் டையில் முடிந்தது.

4வது ஒருநாள் போட்டி

4வது ஒருநாள் போட்டி

இதைத் தொடர்ந்து இன்று 4வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.

278 ரன்கள் குவித்த இந்தியா

278 ரன்கள் குவித்த இந்தியா

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 279 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

2 ரன்கள் எடுத்த கோஹ்லி

2 ரன்கள் எடுத்த கோஹ்லி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 2 ரன்களிலும், ரெகானே 3 ரன்களிலும், ராயுடு 37 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

ரோகித் 79 ரன்கள்

ரோகித் 79 ரன்கள்

ரோகித் சர்மா 79 ரன்களிலும், அஸ்வின் 5 ரன்களிலும் அவுட் ஆகினர்.

அசத்திய டோணி- ஜடேஜா ஜோடி

அசத்திய டோணி- ஜடேஜா ஜோடி

ஆட்ட முடிவில் கேப்டன் டோணி 79 ரன்களுடனும், ஜடேஜா 62 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 127 ரன்களை குவித்தது.

ரோகித் 79 ரன்கள்

ரோகித் 79 ரன்கள்

ரோகித் சர்மா 79 ரன்களிலும், அஸ்வின் 5 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

அசத்திய டோணி- ஜடேஜா ஜோடி

அசத்திய டோணி- ஜடேஜா ஜோடி

ஆட்ட நேர முடிவில் கேப்டன் டோணி 79 ரன்களுடனும், ஜடேஜா 62 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 127 ரன்களை குவித்தது.

அபாரமாக ஆடிய நியூசிலாந்து

அபாரமாக ஆடிய நியூசிலாந்து

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியது.

டெய்லர் 112 ரன்கள்..

டெய்லர் 112 ரன்கள்..

அந்த அணியின் ராஸ் டெய்லர் 112 அடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெற்றி இலக்கான 279 ரன்களை 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டியது நியூசிலாந்து. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து.

தொடரை கைப்பற்றியது

தொடரை கைப்பற்றியது

5 ஒருநாள் போட்டி தொடரில் 3 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Story first published: Tuesday, January 28, 2014, 18:26 [IST]
Other articles published on Jan 28, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+