Porche 911 முதல் Hellcat X132 வரை.. மிரட்டும் தோனியின் கலெக்ஷன்.. அதிக விலைமதிப்புடைய 5 வாகனங்கள்!
ராஞ்சி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிக விலைமதிப்புடைய 5 வாகனங்களை தனது வீட்டில் அலங்கறித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரும் ஜாம்பவானாக உருவெடுத்திருப்பவர் எம்.எஸ்.தோனி. இவர் உலகின் மிகவும் வெற்றி கரமான கேப்டன் ஆவார். அதற்கு உதாரணம் 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த முதல் கேப்டன் தோனிதான் ஆவார்.
தோனிக்கு கிரிக்கெட் எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு கார் மற்றும் வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். தனது பைக்குகளுக்கு என பிரமாண்ட ஷெட் ஒன்றை தனி வீட்டிற்குள் அமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் அதிக விளைமதிப்பு கொண்ட 5 வாகனங்களை பார்க்கலாம்.

Porsche 911
தோனி வைத்துள்ள கார் கலெக்ஷனில் மிகவும் விலைமதிப்பு கொண்ட கார்களில் பொர்ச்சே 911 க்கு தனி இடம் உள்ளது. ரேஸ் கார் வகையை சேர்ந்த இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 கோடியாகும். கார் சந்தையில் அதிக ரேட்டிங்களை பெற்றுள்ள இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டும் திறன் படைத்தது ஆகும்.

ஃபெராரி 599 GTO
தோனியின் வீட்டை அலங்கரிக்கும் கார்களில் ஃபெராரி 599 முரட்டுத்தனமான ஒன்றாகும். V12 இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ள இந்த கார் 661bhp மற்றும் 620Nm டார்க்கை ஏற்படுத்தும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.1.39 கோடி ஆகும். தோனி கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்ததற்காக இந்த கார் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கான்ஃபெடெரேட் ஹெல்காட் X132
உலகின் மிகவும் அதிக எடை கொண்ட பைக்களில் இதுவும் ஒன்று. எம்.எஸ்.தோனி இதனை கடந்த 2018ம் ஆண்டு ரூ.27 லட்சத்திற்கு வாங்கினார். தோனி இந்த பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

போண்டியாக்
தோனி எந்த அளவிற்கு மார்டென் பைக் மற்றும் கார்கள் மீது ஈர்ப்பு கொண்டவரோ, அதே அளவிற்கு விண்டேஜ் வாகனங்கள் மீதும் ஆசை வைத்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக தோனியின் வீட்டில் க்ளாசிக் கார் வகையான பொண்டியாக் ஃபைர்பேர்ட் உள்ளது. 1969ம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் இந்த காரை விற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டுதான் தோனி இந்த காரை வாங்கினார். அவர் வாங்கிய போது இந்த காரின் விலை ரூ. 68 லட்சம் ஆகும்.

ஹம்மர் ஹெச் 2
உலகின் மிகவும் சக்திவாய்ந்த முரட்டுத்தனமான கார்களில் ஹம்மர் முக்கிய இடம் வகிக்கிறது. தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் அடிக்கடி இந்த காரில் தான் வெளியில் சென்று வருவார். கடந்த 2016ம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ராஞ்சியில் நடைபெற்ற போட்டிக்காக நியூசிலாந்து வீரர்கள் பேருந்தில் வந்தபோது, பேருந்துக்கு அருகாமையிலேயே தோனி ஹம்மர் காரை ஓட்டி வந்து கெத்து காட்டியதை இன்றும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அப்போது நியூசிலாந்து வீரர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications