மும்பை : ஒவ்வொரு மனிதர்கள் வாழ்க்கையும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான தருணம் ஆகும். ஒரு சிலருக்கு அது வாழ்நாள் தவம். ஆனால் சிலருக்கு வாழ்க்கை கசந்து போனால் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வார்கள்.
இந்த நிலையில் இரண்டு திருமணம் செய்து கொண்டு வாழும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான முஹம்மது அசாருதீன்.

இவர் நௌரின் என்ற பெண்ணை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனினும் 1996 ஆம் ஆண்டு சங்கீதா பிஜ்லானி என்ற நடிகையுடன் அசாருதீனுக்கு காதல் மலர்ந்தது. இதனை அடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்ட அசாருதீன், சங்கீதா பஜ்லானி உடன் வாழ்க்கை நடத்தி வந்தார். பிறகு ஜுவாலா கட்டவுடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவரையும் அசாருதீன் பிரிந்து சென்றார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த ஜவகர் ஸ்ரீநாத். இவர் 1999 உலகக்கோப்பை முடிந்தவுடன் ஜோஸ்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து ஸ்ரீநாத் பத்திரிக்கையாளர் மாதவி என்ற பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால். அருண் லாலுக்கு முதல் மனைவி இருக்கிறார். எனினும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதை எடுத்து அவரின் அனுமதியைப் பெற்று தன்னைவிட 28 வயது குறைவான சாகா என்ற பெண்ணை அருண் லால் தனது 60-வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சர்ச்சைக்கு பெயர் போன அவர் 1998 ஆம் ஆண்டு நோயலா லீவிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருடன் விவாகரத்து பெற்று ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதம் மாறினார்.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் தினேஷ் கார்த்திக். 2007 ஆம் ஆண்டு நிகிதா என்ற பெண்ணை தினேஷ் கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நிகிதா சக கிரிக்கெட் வீரரான முரளி விஜயுடன் சென்று விட்டதால் தினேஷ் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து கொண்டு 2015 ஆம் ஆண்டு தீபிகா பல்லிக்கல் என்ற ஸ்குவாஷ் வீராங்கனை திருமணம் செய்து கொண்டார்.