மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சாதித்து காட்டிய வீரர்கள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், மற்ற சீனியர் வீரர்கள் நடப்பாண்டு இறுதிக்குள் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது யார் என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரகானே கடைசியாக 2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 144 இன்னிங்ஸில் 5077 ரன்கள் அடித்திருக்கும் ரஹானே, ஒரு நாள் கிரிக்கெட்டில் 2962 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியில் எப்படியாவது இடம் பிடித்து விட ரகானே போராடிய நிலையில், தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் புஜாரா. 37 வயதான புஜாரா கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்காக விளையாடினார். புஜாரா 176 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 43 ஆகும். புஜாராவும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்று போராடிய நிலையில், தற்போது அவருக்கான கதவு அடைக்கப்பட்டு விட்டது. இதனால் அவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா.
42 வயதான அமித் மிஸ்ரா இந்தியாவுக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் விளையாடிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 76 விக்கெட்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 விக்கெட்களும் டி20 கிரிக்கெட்டில் 16 விக்கெட்டு களையும் அமித் மிஸ்ரா வீழ்த்திய நிலையில், தற்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருக்கிறது.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் இசாந்த் சர்மா. 37 வயதை நெருங்கும் இஷாந்த் சர்மா கடைசியாக இந்திய அணிக்கு 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகள் விளையாடி 8 விக்கெட் களையும் இசாந்த் சர்மா வீழ்த்தி இருக்கின்றார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் உமேஷ் யாதவ். 38 வயதை நெருங்கும் உமேஷ் யாதவ். இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளையும் 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றார்.