Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. டி20 உலககோப்பைக்கு இத்தனை டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதா? இந்தியா Vs பாக் ஹவுஸ்புஃல்

மெல்போர்ன் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

உலகின் சிறந்த அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு 100 சதவீத பார்வையாளர்களுடன் நடைபெறும் முதல் உலகக் கோப்பை தொடர் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

ஆஸ்திரேலிய ஆடுகளம் ரன்குவிப்புக்கும் பந்து வீச்சுக்கும் சம அளவில் சாதகமாக செயல்படும் என்பதால் இந்த டி20 உலக கோப்பையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காண சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஹவுஸ் புஃல்

ஹவுஸ் புஃல்

இதேபோன்று அக்டோபர் 23ஆம் தேதி மெல்போனில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்துகின்றன. கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றது. இதற்கு பலி தீர்க்கும் விதமாக இம்முறை இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.

இந்தியா Vs பாக்

இந்தியா Vs பாக்

இதனை எடுத்து மெல்போர்னில் 90 ஆயிரம் மேற்பட்ட டிக்கெட்டுகள் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக விற்று தீரிந்து விட்டது.மேலும் இந்தியா விளையாடும் 5 போட்டிக்கும் டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்று வருகின்றன. இதேபோன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் வரும் 30ஆம் தேதி பெர்த் நகரில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம்.

இதற்கான டிக்கெட்டும் பெரும் அளவு விட்டுத் தீர்ந்து விட்டது.

மற்ற போட்டிகள்

மற்ற போட்டிகள்

இதைப் போன்று அடிலெய்ட் நகரில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் வரும் நவம்பர் இரண்டாம் தேதி மோதுகின்றன. இந்த மைதானத்தில் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம். சிட்னியில் தகுதிச்சுற்று அணியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டுகள் மட்டும் இருக்கின்றன. 5 இலட்சம் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஒட்டுமொத்தமாக விற்று உள்ளதால் ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.

Story first published: Thursday, September 15, 2022, 17:55 [IST]
Other articles published on Sep 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+