கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளில்.. மிகவும் அழகானவர் இவர் தானாம்? - செம டாப்பிக்கா இருக்கே!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளில் மிகவும் அழகானவர் யார் என்று சர்வே எடுத்திருக்கிறது ஒரு அமைப்பு. அப்படிப்போடு.

கிரிக்கெட்.. இந்தியாவின் மதங்களில் ஒன்று. அதை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் வீரர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். குறிப்பாக, கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்து கொள்வதை விட, வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதி ஆர்வம் உண்டு.

ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து.. தனது ஆயுதத்தை கையில் எடுத்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் பயிற்சி வீடியோ!

அதிலும், வீரர்களின் குடும்பம் பற்றி அறிந்து கொள்வதில் எப்போதும் அதிக Search Volume இருக்கும். அதாவது, who is pandya wife, who is chahal wife? என்று. இப்படிப்பட்ட தேடல்களில் ரசிகர்கள் அதிகம் தேடும் மற்றொரு தலைப்பு, who is the most beautiful cricketer wife? என்பது. இந்த செய்தியும் அதைப் பற்றியது தான்.

ஸ்டூவர்ட் பின்னி

ஸ்டூவர்ட் பின்னி

தனியார் அமைப்பு ஒன்று இந்த சர்வேயை எடுத்துள்ளது. இதில் ஐந்தாவது இடத்தை பிடிப்பவர், மயாந்தி லாங்கர். அதாவது ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி. இவர் இந்திய கிரிக்கெட்டில் பெரியளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், அவரது மனைவி மயாந்தி லாங்கர் தனது வசீகர வர்ணனையால் அதிக ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். சர்வதேச போட்டிகளின் போது, இவர் கிரிக்கெட் வீரர்களை பேட்டியெடுப்பதை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

செய் ஏதாவது செய்

செய் ஏதாவது செய்

இந்த பட்டியலில் நான்காம் இடம் பிடிப்பது கீதா பஸ்ரா. நம்ம தமிழ் புலவர் ஹர்பஜனின் மனைவி. பிரிட்டனில் பிறந்தவர் என்றாலும், இந்தியாவில் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பது ஹேசல் கீச். யுவராஜ் சிங்கின் மனைவி. தமிழில் அஜித் நடித்த 'பில்லா' படத்தின் முதல் பாகத்தில் 'செய் ஏதாவது செய்' என்று கவர்ச்சி விருந்து வைத்திருப்பாரே. அவரே தான்.

மேற்கத்திய உடை

மேற்கத்திய உடை

பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆயிஷா முகர்ஜி. நம்ம ஷிகர் தவான் மனைவி. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் பிறந்து, பிறகு டைவர்ஸ் பெற்று ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டவர். மெச்சூரிட்டி ஃபேஸ் என்றாலும், கணவர் விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் குழந்தைகளுடன் ஆஜராகிவிடுவார். இவரது மேற்கத்திய உடை, நடை, பாவனைக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நம்பர்.1

நம்பர்.1

ஃபைனலி... பட்டியலில் முதல் இடம் பிடிப்பது நம்ம கிங் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா. பாலிவுட் நடிகை. ஷாரூக்கானுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். குறிப்பாக, ஷாரூக்குடன் 'rab ne bana di jodi' படத்திலும், அமீர் கானுடன் 'பிகே' படத்திலுன் நடித்தது இவரது பாலிவுட்டின் உச்சிக்கு கொண்டுச் சென்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 Most Beautiful Cricketers Wives - இந்திய கிரிக்கெட் அணி
Story first published: Friday, June 11, 2021, 15:43 [IST]
Other articles published on Jun 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X