5 அதிர வைக்கும் காரணங்கள்.. இந்தியாவை "சென்னை மண்ணில்" இங்கிலாந்து சுருட்டியது எப்படி?.. என்ன ஆனது?
சென்னை: இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி எளிதாக வெற்றிபெற ஐந்து முக்கியமான காரணங்கள் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது.
சென்னையில் 22 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது இல்லை. இந்த நிலையில் முதல்முறை இங்கு இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணிக்கு இந்த தோல்வி பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

காரணங்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற 5 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது . இந்திய வீரர்கள் பல இடங்களில் சொதப்பியது இந்திய அணிக்கு எதிராக சென்றது. அதேபோல் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம் 1
அதன்படி இங்கிலாந்து அணி டாஸ் வென்றது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது. சென்னையில் டாஸ் வெல்லும் அணி எளிதாக டெஸ்டில் வெல்லும் என்பதால் இங்கிலாந்து அணிக்கு இது சாதகமாக மாறியது.

காரணம் 2
அதற்கு அடுத்ததாக ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்தார். தனது 100வது நாள் டெஸ்ட் போட்டியில் மிகவும் பொறுப்பாக ஆடினார். இவர் முதல் இன்னிங்சில் எடுத்த 218 ரன்கள்தான் இரண்டு அணிக்கும் இடையில் பெரிய வேறுபாடாக இருந்தது.

காரணம் 3
அதேபோல் பிட்ச் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்கவில்லை. பிட்ச் தொடக்கத்தில் இந்திய அணிக்கு எதிராக இருந்தது. போக போக இந்திய அணி பேட்டிங் செய்யும் போது பிட்ச் மொத்தமாக பவுலிங் செய்ய சாதகமாக இருந்தது. சென்னை பிட்ச் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

காரணம் 4
இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை. முக்கியாக நதீம் சரியாக பவுலிங் செய்யவில்லை. சில விக்கெட் எடுத்தாலும் இவர் பவுலிங் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கும் ஒன்றாக இல்லை.இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.

காரணம் 5
இதெல்லாம் போக இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் ரோஹித் சர்மா, ரஹானே சரியாக ஆடாதது. பீல்டிங் சரியாக செய்யாதது. 52 எக்ஸ்ட்ரா பந்துகளை வீசியது ஆகியவை இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications