For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஆண்டில் இப்படி ஒரு மாற்றமா? இங்கிலாந்தை வீழ்த்துவது மிக கடினம்.. இந்த 5 பாயிண்ட் படிங்க புரியும்

இங்கிலாந்து: இங்கிலாந்து அணியை அவ்வளவு சுலபமாக இந்தியாவால் வீழ்த்த முடியாது என்பதை வல்லுநர்களே உணர்ந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க தொடருக்கு அடுத்ததாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொடர், இங்கிலாந்து சுற்றுப்பயணம் தான்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட 5வது போட்டி வரும் ஜூலை 1ல் நடைபெறுகிறது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான படை இங்கிலாந்துக்கு 10 நாட்கள் முன்கூட்டியே சென்றுவிட்டது. இதற்கு காரணம் டிராவிட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு முக்கியமான போட்டியாக மாறியுள்ளதுதான்.

என்ன காரணம்

என்ன காரணம்

* இங்கிலாந்து அணி 2021ம் ஆண்டு இருந்ததற்கும், 2022ம் ஆண்டு இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

* ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக, பென் ஸ்டோக்ஸ் புது கேப்டனாகியுள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்களிலும் அபார வெற்றி பெற்றது.

* குறிப்பாக அந்த அணி தடுப்பாட்டத்தில் இருந்து அதிரடிக்கு மாறியுள்ளது. இதற்கு உதாரணம் நியூசி,க்கு எதிரான 2வது டெஸ்டில் 299 என்ற இலக்கை மிக வேகமாக மாறியுள்ளது.

 அனைத்து வீரர்களும் ஃபார்ம்

அனைத்து வீரர்களும் ஃபார்ம்

இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் படு சூப்பரான ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து ஜாஸ் பட்லர் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோரும் இணைவதால், அசுர பலத்துடன் கூடிய அணியாக உருவெடுத்துள்ளது.

 மெக்கல்லமின் என்ட்ரி

மெக்கல்லமின் என்ட்ரி

இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்-ல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ள அவருக்கு, இந்திய வீரர்கள் ஒவ்வொரின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்பது மிக நன்றாக தெரியும். இதுவே இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இந்திய அணி பிரச்சினை

இந்திய அணி பிரச்சினை

இந்திய அணிக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, இங்கிலாந்து பிட்ச்-களை புரிந்துக்கொள்வது தான். இதற்காகவே 10 நாட்கள் முன்கூட்டி சென்றுள்ளனர். எனினும் கடந்த மார்ச் மாதத்திற்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடாததால், மீண்டும் அந்த வடிவ கிரிக்கெட்டிற்கு வீரர்கள் தயாராக வேண்டும்.

Story first published: Tuesday, June 21, 2022, 15:12 [IST]
Other articles published on Jun 21, 2022
English summary
India vs england test match ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+