Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அணிகளுக்கு செக்... ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்... வெளியான புதிய அறிவிப்பு!

சென்னை: 14வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அணிகளுக்கு புதிய செக் வைத்துள்ளது ஐ.பி.எல் நிர்வாகம்.

ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுவரை 1097 வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

அணி நிர்வாகங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க தயாராகி வரும் நிலையில், ஏலம் எடுப்பதில் அனைத்து அணிகளுக்கும் புதிய 5 நிபந்தனைகளை விதித்துள்ளது ஐ.பி.எல் கவுன்சில்.

 முக்கிய செக்

முக்கிய செக்

அணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதனிடையே அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களை ஜன.20ம் தேதி முடிவு செய்துவிட்டது. எனினும் வீரர்களை விடுவிக்க பிப்.11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

 பண விவரம்

பண விவரம்

ஒவ்வொரு அணியும் வைத்துள்ள மீத தொகை: சி.எஸ்.கே ( 19.9 கோடி), டெல்லி ( 12.9கோடி), பஞ்சாப் (53.2 கோடி), மும்பை ( 15.35 கோடி ), ராஜஸ்தான் ( 34.85 கோடி ), பெங்களூரு ( 35.9 கோடி) ஐதராபாத் (10.75 கோடி) கொல்கத்தா ( 10.75 கோடி)

 முக்கிய வாய்ப்பு மறுப்பு

முக்கிய வாய்ப்பு மறுப்பு

இந்தாண்டு மினி ஐ.பி.எல் ஏலம் நடைபெறுவதால் Right ot Match Card ஐ பயன்படுத்த முடியாது. RTM என்பது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் தாங்கள் விடுவித்த வீரரை மீண்டும் பழைய தொகைக்கே ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் மற்ற அணிகளுடனான ஏல போட்டி குறையும்.

 எண்ணிக்கை கட்டுப்பாடு

எண்ணிக்கை கட்டுப்பாடு

ஓவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை அணியில் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஓவ்வொரு அணியும் 18 வீரர்களை கட்டாயம் அணியில் வைத்திருக்க வேண்டும்.

 உள்நாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு

உள்நாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு

அனைத்து அணிகளும் குறைந்தது 17 இந்திய வீரர்களை அணியில் வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை உள்நாட்டில் இருந்து ஏலம் எடுத்துக்கொள்ளலாம்.

 வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு

வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு

ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. சில அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்தான் தலைவராக உள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வீரர்கள் வரை அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறுமா?

ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறுமா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டித்தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது, இந்த ஆண்டு இது எங்கு ஏற்பாடு செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த ஆண்டு ஐ.பி.எல்- ஐ இந்தியாவில் நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

Story first published: Thursday, February 11, 2021, 18:04 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+