Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் செய்த தவறால் இந்தியாவுக்கு 5 ரன்கள் பெனால்டி..!! என்ன நடந்தது..? IND VS SA 3rd TEST

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் ஒரு மெகா தவறை செய்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் ரன் குவித்து வருகிறது

எந்த அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுகிறதோ, அந்த அணிக்கு தான் டெஸ்ட் போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

இதனால் இந்தியாவை விட அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் தென்னாப்பிரிக்க வீரர்களும், தென்னாப்பிரிக்காவை விரைவாக சுருட்டி முன்னிலை பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

ரிஷப் பண்ட் தவறு

ரிஷப் பண்ட் தவறு

இந்த நிலையில், ஆட்டத்தின் 49 புள்ளி 5 வது ஓவரில் இந்தியா அணியின் ரிஷப் பண்ட் ஒரு தவறை செய்து ரசிகர்களை வெறுப்டைய செய்தார். லார்ட் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை பெவுமா 17 ரன்கள் இருந்த போது, அதனை அடித்தார். அந்த பந்து நேராக புஜாராவை நோக்கி சென்றது. அதனை ரிஷப் பண்ட் பிடிக்க டைவ் அடிக்க பந்தை இருவரும் தவறவிட்டனர். பிறகு எப்படி பெனால்டி என்று கேட்கிறீர்களா,,??

பெனால்டி

பெனால்டி

ரிஷப் பண்ட் தவறவிட்ட பந்து, நேராக அவர் வைத்திருந்த ஹெல்மேட்டில் பட்டது. இதனால் நடுவர்கள் பெனால்டியாக எதிரணி 5 ரன்களை வழங்கினர். இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஹெல்மேட்டை இந்திய வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஹெல்மேட் மீது பந்து பட்டால் 5 ரன்கள் பெனால்டி என்று தெரிந்தும், அதனை ஏன் அங்கு வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை 1 ரன் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும், தற்போது பண்ட் 5 ரன்களை பரிசாக தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வழங்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். சரி, அது வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை பொறுத்து இருந்து காண்போம்

Story first published: Wednesday, January 12, 2022, 19:51 [IST]
Other articles published on Jan 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+