Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வீரருக்காக 5 அணிகள் போராட்டம்.. கேமரூன் கிரீனுக்காக கோடிகளை கொட்ட தயார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரே ஒரு வீரருக்காக 5 முன்னணி அணிகள் கோடிகளை குவித்து வாங்குவதற்கு போட்டிப்போட்டு வருகின்றன.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதில் 87 இடங்களை நிரப்புவதற்கு 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர்.

இந்தாண்டு ஏலத்தில் எந்த வீரர் அதிக தொகைக்கு செல்வார், யார் தனி கவனம் பெறுவார் என்ற கேள்விகளுக்கு முதல் விடையாய் இருப்பது ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் மட்டும் தான்.

அப்படி என்ன ஸ்பெஷல்

அப்படி என்ன ஸ்பெஷல்

23 வயதே ஆகும் கேமரூன் க்ரீன் இந்தாண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 290 ரன்களை விளாசியுள்ளார். 503 என்ற எகானமியில் 11 விக்கெட்களும் அடங்கும். இதே போல டி20 கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் விளையாடி 139 ரன்களை குவித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 173.75 ஆகும். குறிப்பாக 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இப்படிப்பட்ட வீரரை வாங்க 5 அணிகள் போட்டிப்போடுகின்றன.

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்தாண்டு தொடர் தோல்விகளை பெற்றதால் கேப்டன் வில்லியம்சன், ரோமாரியோ ஷெப்பெர்ட் போன்ற ஸ்டார் வீரர்களையே கழட்டிவிட்டுள்ளது. எனவே அந்த அணிக்கு தற்போது டாப் ஆர்டரில் பொறுப்புடன் ஆடக்கூடிய ஒரு வீரரும், பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு ஆல்ரவுண்டரும் தேவை. அதற்காக இளம் வயதே ஆகும் கேமரூன் கிரீனை வாங்க கோடிகளை செலவளிக்கவுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் அணி கடந்தாண்டு ஆல்ரவுண்டர் தேர்வுக்கு ஒடியன் ஸ்மித்தை வாங்கியிருந்தது. ஆனால் அவர் சொதப்பிவிட்டதால் கழட்டிவிடப்பட்டார். தற்போதைக்கு பஞ்சாப் அணியில் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கூட இல்லை. கையில் ரூ.32.2 கோடி வைத்துள்ளதால் கேமரூன் கிரீனை எப்படியாவது வாங்கிவிட அதிக தொகையை களமிறக்கும்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்தாண்டு 10வது இடத்தை பிடித்தது. அந்த அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப டிம் டேவிட் வந்த போதும், கெயீரன் பொல்லார்ட்-ன் இடத்தை நிரப்ப யாருமே இல்லை. அதற்காக வாங்கப்பட்ட டேனியல் சாம்ஸும் ஏமாற்றியதால் கழட்டிவிடப்பட்டார். இதனால் அடுத்த பொல்லார்ட் என்ற நோக்கத்தில் கேமரூன் கிரீனை வாங்கவுள்ளது.

ராஜஸ்தான் ஏன்?

ராஜஸ்தான் ஏன்?

ராஜஸ்தான் அணி கடந்தாண்டு வரை ஜேம்ஸ் நீஷம் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் சேவை பெற்று வந்தது. ஆனால் இருவரும் சொதப்பியதே மிச்சம். இதனால் அவர்களிடம் இருந்து அந்த அணி பிரிந்தது. இதனையடுத்து ஆல்ரவுண்டரே இல்லாமல் இருக்கும் ராஜஸ்தானின் முதல் குறியாக கேமரூன் தான் இருக்கிறார். இவர் மட்டுமின்றி சாம் கரண் போன்ற வீரர்களுக்கும் குறிவைக்கும்.

ரூ.9 கோடி செலவு

ரூ.9 கோடி செலவு

லக்னோ அணி கடந்தாண்டு ஜேசன் ஹோல்டர் என்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை ரூ. 8.75 கோடி கொடுத்து வாங்கியது. பவுலிங்கில் அவர் 14 விக்கெட்களை எடுத்த போதும் 9.42 எகானமி என ரன்களை வாரி வழங்கினார். மேலும் பேட்டிங்கில் 58 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றினார். இதனால் அவரை கழட்டிவிட்ட லக்னோ அணி, அவரின் இடத்தை நிரப்ப ரூ.9 கோடி வரை செலவு செய்து கேமரூனை கைப்பற்ற நினைக்கும்.

Story first published: Wednesday, December 21, 2022, 18:33 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+