Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்ல 500 விக்கெட்டுகளை எடுக்கறது ஜோக் இல்ல.. யுவராஜ்சிங் பாராட்டு

டெல்லி: இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 வெற்றிகளை பெற்று இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

England's squad for 1st test vs Pakistan

இந்த தொடரில் தன்னுடைய 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் 7வது நபராக சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

அவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்துவரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அவரை ஜாம்பவான் என்று புகழ்ந்துள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் சாதனை

ஸ்டூவர்ட் பிராட் சாதனை

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 4 மாதங்கள் கழித்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் 2 வெற்றிகளை பெற்று இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

பிராட் ஒரு ஜாம்பவான்

பிராட் ஒரு ஜாம்பவான்

அவருக்கு சர்வதேச அளவில் பல்வேறு வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், பாராட்டு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 500 விக்கெட்டுகளை எடுப்பது ஜோக் அல்ல என்று குறிப்பிட்டுள்ள யுவராஜ், பிராட் ஒரு ஜாம்பவான் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு யுவராஜ் கோரிக்கை

ரசிகர்களுக்கு யுவராஜ் கோரிக்கை

அதிகமான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதி போன்றவற்றின் மூலமே பிராட் இந்த நிலையை எட்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள யுவராஜ் சிங், பிராட் பந்துகளில் ஒரு ஓவரில் தான் அடித்த 6 சிக்ஸ்களை கொண்டு அவரை மதிப்பிடாமல், அவரது சாதனைக்கு அவரை அதிகமாக பாராட்ட வேண்டும் என்று தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடித்து சாதனை

ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடித்து சாதனை

பிராட்டின் கேரியரின் இரண்டாவது ஆண்டில் கடந்த 2007ல் இந்தியா -இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், ஸ்டூவர்ட்டின் ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸ்களை விளாசி தள்ளினார் யுவராஜ் சிங். இதன்மூலம் 12 பந்துகளுக்கு 50 ரன்களை குவித்தார் டி20 வடிவத்தில் அதிவிரைவாக குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட ரன்கள் என்ற யுவராஜின் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

Story first published: Wednesday, July 29, 2020, 19:12 [IST]
Other articles published on Jul 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+