Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீவிரவாதிகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு அச்சுறுத்தல் .. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த உத்தரவு..!!

கராச்சி: தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்துள்ளதால் பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

Recommended Video

PAK vs WI 5000 ராணுவ வீரர்களை நிறுத்த Pakistan உத்தரவு | Oneindia Tamil

தற்போது தான் ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அங்கு பாதுகாப்பாக நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தொடரிலிருந்து வெளியேறியது.

தீவிரவாத அச்சுறுத்தல்

தீவிரவாத அச்சுறுத்தல்

இதே போன்று இங்கிலாந்தும் தீவிரவாதிகளால் ஏற்படும் ஆபத்தை காட்டி தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை தந்தது. இதனால், பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இது பாதுகாப்பான நாடு தான் என்று உலகிற்கு காட்ட திட்டமிட்டது. இதனையடுத்து, தங்களது நாட்டில் ஐ.சி.சி. தொடரை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

கோரிக்கை

கோரிக்கை

இதனை ஏற்று கொண்ட ஐ.சி.சி., 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேசிய பாகிஸ்தான் 3 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியை தங்களது நாட்டில் நடத்த பேசி அனுமதி வாங்கியுள்ளது. ஆனால், அதற்கு முன் தங்களது நாடு பாதுகாப்பானது என்பதை காட்டுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டிற்கு அழைத்தது.

கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட் தொடர்

இதனையடுதது, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. இந்த தொடர் நாளை மறுநாள் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் பல்வேற பாதுகாப்பு பணியை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு பணி

பாதுகாப்பு பணி

889 கமோண்டோ படை வீரர்கள், 3822 போலீசார் மற்றும் 500 RRF படை வீரர்கள், 46 டி.எஸ்.பி.கள்,315 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 50 பெண் போலீசார் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இருந்து மைதானம் வரை நிறுத்தப்படுவார்கள். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகள் தெரிவித்துள்ளது.

Story first published: Saturday, December 11, 2021, 13:57 [IST]
Other articles published on Dec 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+