500வது டெஸ்ட்.. "தம்பி"யை வாழ்த்திய "அண்ணன்"! #india500
மும்பை: 500வது டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தை வாழ்த்துவதாக ஐசிசி கூறியுள்ளது.
ஐசிசி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்பே பிறந்ததாகும். 1909ம் ஆண்டு ஐசிசி நிறுவப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் 1928ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் தம்பிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் அண்ணன்.

500வது டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நாளை தொடங்கவுள்ளது. இந்தியா, நியூசிலாந்து இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும்.

வாழ்த்துகள் குவிகின்றன
இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. அந்த அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பெரிய விஷயம்
இதுகுறித்து ஐசிசி சேர்மன் சஷாங் மனோகர் விடுத்துள்ள செய்தியில், இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய மைல் கல்லாகும். ஐசிசியின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறது இந்தியா. கிரிக்கெட் பாரம்பரியத்தை இந்தியா சிறப்பாக பேணிக்காத்து வருகிறது.

தரமான வீரர்களைக் கொடுத்த நாடு
மிகச் சிறந்த உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் பலரை இந்தியா கொடுத்துள்ளது. உலகெங்கும் உள்ள ரசிகர்களை மகிழ்த்த வீரர்கள் அவர்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் மனோகர்.


Click it and Unblock the Notifications