Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெம்பக் கேவலம்... 5வது டெஸ்ட்டிலும் அடங்கிப் போன இந்தியா.. 3வது நாளிலேயே இன்னிங்ஸ் தோல்வி...!

லண்டன்: 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் 3வது நாளிலேயே சுருண்டு போய் விட்டது இந்தியா. இப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது.

இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவின் பேட்டிங் மிக மோசமாக இருந்ததே இந்த படு தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஏற்கனவே 4வது டெஸ்ட் போட்டியும் 3வது நாளிலேயே முடிந்தது. அதிலும் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்திருந்தது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

முதல் இன்னிங்ஸை விட கேவலமான ஆட்டம்

முதல் இன்னிங்ஸை விட கேவலமான ஆட்டம்

இந்தியா தனது முதல் இன்னிங்ஸிலாவது 148 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 94 ரன்களில் சுருண்டு போனது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 486 ரன்களைக் குவித்திருந்தது. அந்த அணியின் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 149 ரன்களைக் குவித்திருந்தார்.

யாருமே ஜொலிக்கவில்லை

யாருமே ஜொலிக்கவில்லை

இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுமே ஜொலிக்கவில்லை. அதுதான் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது.

50 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்கள்

50 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்கள்

இந்திய அணி 46 ரன்கள் எடுத்திருந்தபோதே 5 விக்கெட்கள் விழுந்திருந்தன. அதிலிருந்து கடைசி வரை மீளவே இல்லை இந்தியா.

டோணி டக் அவுட்

டோணி டக் அவுட்

முதல் இன்னிங்ஸில் கஷ்டப்பட்டு 82 ரன்களைச் சேர்த்த கேப்டன் டோணி நேற்றைய ஆட்டத்தில் 5 பந்துகளைச் சந்தித்து ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கோஹ்லி 20

கோஹ்லி 20

விராத் கோஹ்லி ரொம்பக் கஷ்டப்பட்டு 20 ரன்களைச் சேர்த்தார். அவர் இந்தத் தொடரில் மொத்தமே 134 ரன்களைத்தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சனுக்கு சாதனை போச்சு

ஆண்டர்சனுக்கு சாதனை போச்சு

இந்தியாவுக்கு இப்படி தோல்வியை வேதனையாக கொடுத்த இங்கிலாந்து தனது ஒரு சாதனையைத் தவற விட்டது. அதாவது இங்கிலாந்தின் இயான் போத்தம் 383 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளராக திகழ்கிறார். அந்த சாதனையை தகர்க்க நேற்று ஜேம்ஸ் ஆண்டர்சன் முயன்றும் முடியவில்லை. அவர் மேலும் 3 விக்கெட்களைச் சாய்த்திருந்தால் அச்சாதனையைப் புரிந்திருக்கலாம்.

3வது போட்டியிலிருந்து வெளுத்து வாங்கிய இங்கிலாந்து

3வது போட்டியிலிருந்து வெளுத்து வாங்கிய இங்கிலாந்து

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து அணி அங்கு கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுதாரித்து இந்தியாவை வெளுத்தெடுக்க ஆரம்பித்து விட்டது.

அதிரடி வெற்றிகள்

அதிரடி வெற்றிகள்

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது சிறப்பான ஆட்டத்தால் 266 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அதன் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து மேலும் வலுவான ஆட்டத்தைக் காண்பித்ததால் இந்தியாவால் சுதாரிக்க முடியாமல் போய் விட்டது.

ஜோ ரூட் ஆட்டநாயகன்

ஜோ ரூட் ஆட்டநாயகன்

இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்ட ஜோ ரூட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 518 ரன்களைக் குவித்துள்ளார்.

Story first published: Monday, August 18, 2014, 8:54 [IST]
Other articles published on Aug 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+