
வீரர்களுக்கு கொரோனா
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாகிகள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நேற்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. எனினும் இது டெல்டா ப்ளஸ் கொரோனா வகையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நீடித்த குழப்பம்
வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், மொத்த அணியும் தற்போது கடுமையான குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டிக்கு இன்னும் 48 மணி நேரங்களே உள்ள சூழலில் மொத்த அணியும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் போட்டி நடைபெறுமா, ரத்தாகுமா என்ற சந்தேகம் பரவி வந்தது.

புதிய முடிவு
இந்நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது இங்கிலாந்து வாரியம். ஒரே இரவில் அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் புதிய அணியையே உருவாக்கியுள்ளனர். அந்த அணிக்கு இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன்சி
ஐபிஎல் தொடருக்கு பின்னர் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பென் ஸ்டோக்ஸ் விளையாடாமல் உள்ளார். இதனால் திடீரென அவர் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சீனியர் வீரர்களும் குவாரண்டைனில் இருப்பதால், பென் ஸ்டோக்ஸ் தான் முதல் தேர்வாக இருந்துள்ளார் எனக்கூறப்படுகிறது. வீரர்களுக்கு கொரோனா உறுதியான போதும், இந்த போட்டியில் முழு அளவிலான பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications