Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 முன்னணி வீரர்கள் இல்லை.. ஐபிஎல் அணிகளுக்கு ஆப்பு வைத்த தென்னாப்பிரிக்கா.. புதிய அறிவிப்பு வெளியீடு

மும்பை: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பால் ஐபிஎல் அணிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

பயிற்சி முகாம்கள்

பயிற்சி முகாம்கள்

வரும் மார்ச் 14ம் தேதி முதல் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கவுள்ளன. இதற்காக மும்பையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பபுளுக்குள் வீரர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். வீரர்களின் உடற்தகுதி, ப்ளேயிங் 11 தேர்வுகள் என பல்வேறு ஆய்வுகளையும் அணி நிர்வாகங்கள் தொடங்கிவிட்டன.

அணிகளுக்கு ஆப்பு

அணிகளுக்கு ஆப்பு

இந்நிலையில் அதற்கு சிக்கல் உருவாகியுள்ளது. ப்ளேயிங் 11-க்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 7 முன்னணி தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே உறுதி செய்துள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

தென்னாப்பிரிக்க அணி வரும் மார்ச் 18ம் தேதி முதல் வங்கதேசத்திற்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 7 வீரர்கள் தான் ஐபிஎல் தொடரின் முதல் பகுதியை மிஸ் செய்யப்போகிறார்கள்.

வீரர்களின் விவரம்

வீரர்களின் விவரம்

டிக்காக் ( லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் )

மார்கோ ஜேன்சன் ( மும்பை இந்தியன்ஸ் )

ககிஸ்கோ ரபாடா ( பஞ்சாப் கிங்ஸ் )

டேவிட் மில்லர் ( குஜராத் டைட்டான்ஸ் )

லுங்கி ங்கிடி ( டெல்லி கேப்பிடல்ஸ் )

ப்ரிடோரிஸ் ( சென்னை அணி )

மார்க்ரம் ( ஐதராபாத் )

Recommended Video

Hardik Pandya takes U-turn after stern warning from BCCI selectors | Oneindia Tamil
பாதி ஆட்டமே இல்லை

பாதி ஆட்டமே இல்லை

இவர்களில் டிகாக் தவிர்த்து மற்ற 6 வீரர்களும் டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்கள். அதன்படி டெஸ்ட் போட்டிகள் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முடித்துவிட்டு, இந்தியா வந்தாலும், குவாரண்டைன், பயிற்சிகளை முடித்துவிட்டு, ஏப்ரல் 19ம் தேதிக்குள் மேல் தான் ஐபிஎல் -ல் விளையாட முடியும். இது அணிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Story first published: Tuesday, March 8, 2022, 17:01 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+