இந்தியா vs வங்கதேசம்: சச்சின்- சேவாக் ஜோடியை முந்திய, தவான்- ரோகித் பார்ட்னர்ஷிப்
மெல்போர்ன்: உலக கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் சச்சின் மற்றும் சேவாக் குவித்த ரன்களைவிட, கொஞ்சம் அதிகமாக போயுள்ளனர் தவானும், ரோகித்தும்.
வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில், முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். 16.3 ஓவர்களாக இருந்தபோது இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹ்மான் , தவானை ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்தார்.

முன்னதாக 2011 உலக கோப்பையில் சச்சின், சேவாக் இணைந்து வங்கதேசத்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தனர். உலக கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் அதுவாகும். இன்று அந்த பதிவு முறியடிக்கப்பட்டுள்ளது.
Story first published: Thursday, March 19, 2015, 10:49 [IST]
Other articles published on Mar 19, 2015


Click it and Unblock the Notifications