Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20யில நாங்க எப்பவுமே கிங்தான்... தொடர்ந்து 7வது வெற்றி... கொண்டாட்டத்தில் இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் தொடர்ந்து இந்த தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 11 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் டி20 தொடர்களில் தொடர்ந்து 7வது வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.

7th unbeaten T20 series for Team India

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக விளையாடிவரும் டி20 தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெற்றி கொண்டுள்ளது. இன்னும் ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 7வது வெற்றித் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 தொடர்களையும் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களையும் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடரை சேர்த்து தொடர்ந்து 7வது தொடர்கள் வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.

Story first published: Sunday, December 6, 2020, 20:13 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+