MS Dhoni: மறக்க முடியுமா? ஏப்.2, 2011… 28 ஆண்டு கால கனவு.. அந்த நாளை இன்றும் கொண்டாடும் ரசிகர்கள்
மும்பை: 8 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான் இந்திய அணி உலக கோப்பையை தோனியின் சிக்சரால் வென்று சாதனை படைத்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்கவுள்ளது. வரும் மே 30ம் தேதி துவங்கி ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

ஐசிசி வெளியீடு
உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை சரவ்தேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

இறுதிப்போட்டி
இந்நிலையில் 8 ஆண்டுக்கு முன், ஏப்ரல் 2ம் தேதி, 2011ம் ஆண்டு மும்பையில் 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின், 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
மறக்க முடியாத வீடியோ
அந்த இறுதி போட்டியை கிரிக்கெட் பார்க்கும், நேசிக்கும் ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அப்போதைய இந்திய கேப்டன் தோனி, சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

புகழ் பாடும் ரசிகர்கள்
8 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிகர்கள் அந்த தருணத்தை மறக்காமல் இருக்கின்றனர். அந்த வீடியோவை மீண்டும், மீண்டும் பார்த்து மகிழ்கின்றனர். தல தோனியின் புகழை பாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications