Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“83” திரைப்படம் நஷ்டம்? ரன்வீர்சிங் சம்பளத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சினை..குவிந்த பாராட்டுகள் வீணா

மும்பை: சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த '83' திரைப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை ஏந்தியதை மையமாக கொண்டு "83" என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த ஒன்றரை வருட காலத்திற்கும் மேலாக தள்ளிப்போய்கொண்டே இருந்த இத்திரைப்படம் இறுதியாக கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறைகாக வெளியானது.

 திரையுலக பட்டாளம்

திரையுலக பட்டாளம்

இத்திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் கபிர் கான் இயக்க, கபில் தேவ் ஆக ரன்வீர் சிங் நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோன்., ஜீவா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் தோன்றியிருந்ததால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கிரிக்கெட்டை மையமாக கொண்ட சிறந்த திரைப்படம், கண்களில் கண்ணீர் வரவழைத்தது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனைத்து நகரங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் வசூலை பொறுத்தவரையில் நஷ்டம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்த்த வசூல் இல்லை

எதிர்பார்த்த வசூல் இல்லை

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பொருளாதார நிபுணர் டாரன் ஆதர்ஷ், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 83 திரைப்படம், மொத்தமாக 3,741 திரையரங்களில் வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களான கடந்த வெள்ளிக்கிழமை 12.64 கோடி, சனிக்கிழமை 16.95 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.17.41 கோடி என மொத்தமாக ரூ.47 கோடி தான் வசூலாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

83 படம் எப்படி இருக்கு? | Kapil Dev, Ranveer Singh, Yessa? Bussa?
 ரன்வீர் சிங்கின் சம்பளம்

ரன்வீர் சிங்கின் சம்பளம்

இப்படி பல்வேறு சிறப்புகளுடனும், பட்ஜெட்டிலும் உருவாகியும் கூட ரூ.47 கோடி தான் வசூலாகியுள்ளது என்பது குறைந்த தொகை ஆகும். இப்படி படத்தில் நடித்துக் கொடுத்த ரன்வீர் சிங்கிற்கு இன்னும் பாதி அளவிலான சம்பளம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நஷ்டத்தால் அவருக்கு அந்த தொகை கொடுக்கப்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும், இதுபோன்று வரலாற்றுப் படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங்கே தானாக முன்வந்து மீதி தொகை வேண்டாம் எனக் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 30, 2021, 20:18 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+