Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை மிஸ் செய்யும் இந்திய வீர்ரகள்!

Recommended Video

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தொடரில் பங்கேற்காத இந்திய வீரர்கள்

டெல்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 8 வீரர்களும் விளையாடுவது சந்தேகமே.

இந்தியா உள்பட 10 நாடுகள் ஐசிசியின் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நாடுகள் அந்தஸ்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் இணைந்துள்ளன. இதில் அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது.

ஜூன் 14 முதல் 18ம் தேதி வரை பெங்களூரில் இந்த டெஸ்ட போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில், வரும் ஜூலையில் இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

 கவன்டி போகிறார் கோஹ்லி

கவன்டி போகிறார் கோஹ்லி

அதற்கு தயாராகும் வகையில், இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி ஜூன் மாதம் முழுவதும் இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாடுகிறார். அதனால், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 8 பேர் விளையாட மாட்டார்கள்

8 பேர் விளையாட மாட்டார்கள்

இந்த நிலையில் மேலும் 8 இந்திய டெஸ்ட் வீரர்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, அஜங்யா ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா, முரளி விஜய், ஷிகார் தவான் ஆகியோரும் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

 கவுன்டிக்காக விளையாடுகின்றனர்

கவுன்டிக்காக விளையாடுகின்றனர்

ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு கவுன்டி அணிக்காக விராட் கோஹ்லி, அஸ்வின் இங்கிலாந்து புறப்படுகின்றனர். இஷாந்த் சர்மா, புஜாரா ஏற்கனவே அங்கு விளையாடி வருகின்றனர்.

 பயற்சிக்காக செல்கின்றனர்

பயற்சிக்காக செல்கின்றனர்

இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய ஏ அணி ஜூன் மாதம் இங்கிலாந்து செல்கிறது. புவனேஸ்வர் குமார், பும்ரா உள்ளிட்டோர் ஏ அணிக்காக விளையாட உள்ளனர். இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு தயாராகும் வகையில் இவர்கள் இந்திய ஏ அணிக்காக விளையாட உள்ளனர். அதனால், 9 டெஸ்ட் வீரர்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

Story first published: Monday, May 7, 2018, 11:38 [IST]
Other articles published on May 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+