Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு இடையே.. வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து.. அதிர்ந்து போன வீரர்கள்..எப்படி நடந்தது?

கொழும்பு: இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து சிவப்பு நிறத்திற்கு மாறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று முடிந்தது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வென்று டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இலங்கைக்கும் இங்கிலாந்திற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேல் மைதானத்தில் நடந்தது. இதில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 344 ரன்கள் எடுத்தது. பின் மீண்டும் பேட்டிங் இறங்கிய இலங்கை அணி 126 ரன்களுக்கு அவுட் ஆனது.

அவுட்

அவுட்

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பிரைஸ்டோ மெண்டிஸ் போட்ட 10வது ஓவரில் சிக்ஸ் அடித்தார். இந்த பந்து பவுண்டரி லைனை தாண்டி பறந்து சென்றது.

பெயிண்ட்

பெயிண்ட்

மைதானத்தில் கோடு போடுவதற்காக வைத்து இருந்த பெயிண்ட் டப்பாவில் பறந்து சென்று இந்த பந்து விழுந்தது. இதனால் சிவப்பு நிற பந்து மொத்தமாக வெள்ளை நிறத்திற்கு மாறியது. கிரீஸ் லைனில் கோடு போடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த பெயிண்ட் ஆகும் இது.

மாறியது

மாறியது

வெள்ளை பெயிண்டில் மூழ்கிய அந்த பந்தை அங்கு இருந்து வீரர் ஒருவர் எடுத்து துணியில் துடைத்தார். ஆனால் துணியில் துடைத்த பின்பும் கூட அந்த பந்து வெள்ளை நிறத்திலேயே இருந்தது. இதை பார்த்ததும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி வீரர்கள் அதிர்ந்து போனார்கள்.

டெஸ்ட்

டெஸ்ட்

டெஸ்ட் போட்டியில் வெள்ளை பந்தை வைத்து ஆட முடியாது. இதனால் உடனே புதிய சிவப்பு பந்து எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் மைதானத்தில் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போட்டியின் போது மைதானத்திற்குள் ராட்சச உடும்பு ஒன்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 26, 2021, 15:43 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+