WATCH: இந்தா வாங்கிக்க..! பவுன்சரை இப்படியும் தடுப்போம்ல..!! கிரிக்கெட்டை புட்பாலாக்கிய வீரர்..!
Recommended Video
லண்டன்: இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் பவுன்சரை வீரர் ஒருவர் ஹெல்மெட்டில் தடுத்த வீடியோ, வைரலாகியது.
கிரிக்கெட்டில் கடந்த ஒரு வாரம் கடந்தும் உலா வரும் செய்திகளில் முக்கியமானது ஆர்ச்சர் பவுன்சர். அந்த பந்தால் அடி வாங்கி நிலைகுலைந்து மயங்கி விழுந்தார் ஸ்மித்.
கண்கள் வலிக்கிறது, தலையை சுற்றுகிறது என்று கூறியதால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளார். ஆர்ச்சரும் பந்துவீச்சு இன்னும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

தடுக்கும் வீரர்
இந் நிலையில் அதே போன்று பவுன்சர் வந்தால் ஒரு வீரர் எப்படி தடுப்பார் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. இங்கிலாந்தில் விளையாடிய போட்டி ஒன்றில் இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

கவுண்டி போட்டி
இங்கிலாந்தில், கவுண்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீசெஸ்டர் அணிக்கும், டுர்ஹாம் அணிக்கும் இடையே போட்டி ஒன்று நடந்தது. அப்போது ஒரு முனையில் இருந்து ஒரு பவுலர் பந்து வீசுசிறார். அதை எதிர்கொள்ளும் இடது கை பேட்ஸ்மென் மார்க் கோஸ்குரோவ், சில அடிகள் முன்னே வந்து பந்தை பேட்டால் தடுக்காமல் தமது ஹெல்மெட்டால் தடுக்கிறார்.

பந்தை முட்டும் வீரர்
அதாவது, பேட்டால் விளையாடாமல் ஹெல்மெட்டால் குனிந்து பந்தை முட்டி ஸ்லிப் திசைக்கு அனுப்பினார். அதை விக்கெட் கீப்பரும் அழகாக பிடிக்கிறார். வீரர்கள் அனைவரும் சர்வ சாதாரணமாக மீண்டும் விளையாட தொடங்குகின்றனர்.
ரசிகர்கள் ஆச்சர்யம்
இந்த வினோதமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பவுன்சர் பந்தை எதிர் அணியின் பேட்ஸ்மேன் எதிர்கொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications