Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தின் திசையையே மாற்றிய தேனீ.. ஆஸி - தென்னாப்பிரிக்க டெஸ்டில் நடந்த சுவாரசியம் - வீடியோ

Recommended Video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்... குறுக்கிட்ட தேனீ ... தப்பிய விக்கெட்

கேப்டவுன்: ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் குயிண்டன் டி காக்கை தேனீ ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் முக்கியமான விக்கெட் ஒன்றை எடுக்க தவறியுள்ளார்.

இந்த தொடரில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. வார்னர், டி காக் சண்டை இந்த தொடரில் தான் நடந்தது. கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தடை இதில்தான் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வித்தியாசமாக தேனீ பிரச்சனை ஒன்று வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

சரியாக 30வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் வீசிய பந்தை அடிக்க ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் வெளியே சென்றார். ஆனால் அவர் மிஸ் செய்த பந்தை கீப்பர் குயிண்டன் டி காக் பிடித்தார். ஆனால் அவர் இந்த நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி விக்கெட் எடுக்காமல் பந்தை தவறவிட்டார்.

தேனீ

அவரது கையை தேனீ கடித்துதான் இதற்கு காரணம். அவரது இடது கையில் தேனீ கடித்துவிட்டு அங்கேயே இருந்துள்ளது. இது அங்கு இருந்த கேமராக்களில் பதிவாகி உள்ளது. சரியாக விக்கெட் எடுக்க செல்லும் நேரத்தில் அவரை அந்த தேனீ கடித்துள்ளது.

விடவில்லை

விடவில்லை

ஆனால் அதற்கு பின்பும் கூட அந்த தேனீ அவரை விடவில்லை. அவர் தட்டிவிட்டு பின்பும் அந்த தேனீ அவரது கைகளிலேயே இருந்தது. பின் அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி முழுக்க அவர் இந்த கடியால் ஏற்பட்ட வலியால் கஷ்டப்பட்டு வந்தார்.

வைரல்

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இவர் ''ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்ஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனீயை வைத்து டி காக்கை அவர் திசை திருப்பி இருக்கிறார். ஐசிசி இதை விசாரிக்கும்'' என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 1, 2018, 13:15 [IST]
Other articles published on Apr 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+