For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் பெரிய ஸ்டேடியம்...அரங்கை அதிர வைக்கும் வந்தே மாதரம் பாடல்..புகைப்படம் வெளியிட்டுள்ள வீரர்கள்

சென்னை: 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் அகமதாபாத் ஸ்டேடியத்தை பார்த்து அசந்த இந்திய வீரர்கள் அது குறித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 1 -1 என்ற சமநிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அங்கு சென்றுள்ள இரு நாட்டு வீரர்களும் ஸ்டேடியம் குறித்து போடும் ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் பிப்.24ம் தேதி நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா ஸ்டேடியத்தில் தொடங்கும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.

மைதானம்

மைதானம்

மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு மறுசீரமைப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 பேர் வரை அமரக்கூடிய இது உலகின் மிகப்பெரும் ஸ்டேடியம் ஆகும். மேலும் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டிதான் மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.

வந்தே மாதரம்

வந்தே மாதரம்

மைதானம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், அங்கு போடப்படும் உள்ளூர் பாட்டுகள் பயிற்சியை முடிக்க உதவுகிறது என தெரிவித்துள்ளார். அங்கு வீரர்களின் பயிற்சியின் போது வந்தே மாதரம் பாடல் போடப்பட்டிருந்தது.

பண்ட்

பண்ட்

மைதானத்தின் பயிற்சி கூடத்தில் கோலி, அக்‌ஷர் பட்டேல், ஹர்த்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் புகைப்படம் வெளியிட்டுள்ள ரிஷப் பண்ட் புது மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று ஹர்த்திக் பாண்டியாவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, February 20, 2021, 15:50 [IST]
Other articles published on Feb 20, 2021
English summary
‘a bit of local music to help get through to the end’ Ben Stokes on new Motera Cricket stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+