Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்மாடி, இப்ப தான் கொஞ்சம் பாரம் குறைஞ்சிருக்கு: வெற்றி பற்றி டோணி

அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது மூலம் கொஞ்சம் பாரம் குறைந்துள்ளதாக கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இது குறித்து கேப்டன் டோணி கூறுகையில்,

பாரம்

பாரம்

பாகிஸ்தானை தோற்கடித்தது மூலம் எங்கள் தோள்களில் இருந்து கொஞ்சம் பாரம் குறைந்துள்ளது.

வெற்றி

வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக 6 முறை வெற்றி பெற்றுள்ளது நல்லது தான். உலகம் நிலைத்திருக்கும் வரை இந்த வெற்றி நிலைத்திருக்கப் போவது இல்லை. உலகக் கோப்பை சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த சாதனை எப்பொழுதாவது முறியடிக்கப்படும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியில் முன்பு போன்று திறமையான வீரர்கள் இல்லை. ஆனால் அவர்கள் அணியில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் பலமே ஆல் ரவுண்டர்கள் தான். அந்த அணியில் அப்துல் ரசாக் போன்றவர்கள் இருந்தார்கள். அத்தகையவர்கள் தற்போது இல்லை.

கோஹ்லி

கோஹ்லி

விராத் கோஹ்லி சிறப்பாக பேட் செய்தார். அவரும் ஷிகரும் சேர்ந்து சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் ஒரு அணியாக சேர்ந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

அண்மையில் நாங்கள் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் கடைசியாக வெற்றி பெற்றோம். இந்நிலையில் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது என்றார் டோணி.

Story first published: Monday, February 16, 2015, 13:41 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+