Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிலேயே படாமல் சிக்ஸ் போன பந்து.. கிரிக்கெட் வரலாற்றில் விநோத சம்பவம்!

டொராண்டோ: கனடா சூப்பர் 60 கிரிக்கெட் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து கீரன் பொல்லார்ட்டின் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலாகப் பறந்து நேரடியாக பவுண்டரியை தாண்டிய விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

டொராண்டோ சிக்சர்ஸ் மற்றும் மிசிசாகா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர் அலி கான், அதிரடி வீரர் கீரன் பொல்லார்டுக்கு ஒரு மோசமான பவுன்சர் பந்தை வீசினார். அந்தப் பந்து சற்று நகர்ந்து வைடாக சென்று பொல்லார்டின் பேட்டில் படாமல், விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலாக எகிறி நேராக எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விழுந்தது.

A Bouncer Flies Over the Wicket Keeper Straight for Boundary Without Touching Bat in Canada Super 60 Cricket Tournament

இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிக்சர் சென்றதாக நினைத்துக் கொண்டாடினர். ஆனால் கிரிக்கெட் விதிகளின்படி, பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் படாததால் அது சிக்சராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கள நடுவர்கள் அந்தப் பந்தை வைடாக அறிவித்து, பவுண்டரியை தொட்டதற்காக 4 ரன்கள் வழங்கி மொத்தம் 5 எக்ஸ்ட்ரா ரன்களாகக் கணக்கில் சேர்த்தனர்.

10 ஓவர்கள் கொண்ட இந்த லீக் போட்டியில் எல்லைக்கோட்டின் தூரம் மிகக் குறைவாக வைக்கப்பட்டிருந்ததே பந்து எளிதாக எல்லைக்கோட்டைத் தாண்டக் காரணமாக அமைந்தது. மைதானமும் சிறியதாக இருந்த நிலையில் பவுண்டரி எல்லைகளும் அருகே இருந்ததால் தான் இது சாத்தியம் ஆனது.

4 போட்டிகளில் 363 ரன்கள்.. விமர்சகர்களின் வாயை அடைத்த ரோஹித் சர்மா.. உலகக்கோப்பையில் இடம் உறுதி

4 போட்டிகளில் 363 ரன்கள்.. விமர்சகர்களின் வாயை அடைத்த ரோஹித் சர்மா.. உலகக்கோப்பையில் இடம் உறுதி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டொராண்டோ சிக்சர்ஸ் அணி 10 ஓவர்களில் 130 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மிசிசாகா மாஸ்டர்ஸ் அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்துல் ரஹீம் டோப்பின் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து அசாம் கான் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் டொராண்டோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Story first published: Monday, October 5, 2026, 11:24 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+