10 ஆண்டுகள் கழிந்தாலும் அப்படியே பசுமையா இருக்கு... நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட பிசிசிஐ
டெல்லி : உலக கோப்பை 2011 வெற்றியின் 10 ஆண்டுகள் நிறைவை இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது.
இதையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் மகிழ்ச்சி ட்வீட்களை பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயும் தனது ட்விட்டர் பக்கத்தில் 10 ஆண்டுகள் கழிந்தாலும் உலக கோப்பை 2011 வெற்றி பசுமையாக உள்ளதாக மகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளது.

வரலாற்று சாதனை
கடந்த 2011 ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி வரலாற்று சாதனை புரிந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெற்றி கொண்டது. இந்திய அணி குழுவாக ஒருங்கிணைந்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய போதிலும் தோனி மற்றும் கம்பீர் போட்டியின் வெற்றி நாயகர்களாக இருந்தனர்.

கொண்டாட்டத்தில் இந்திய அணி
இந்நிலையில் இந்த வெற்றியின் 10 ஆண்டுகள் நிறைவை இந்திய கிரிக்கெட் அணி கொண்டாடி வருகிறது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் ட்விட்டர் பக்கங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிசிசியும் தன்னுடைய பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

பிசிசிஐ ட்வீட்
10 ஆண்டுகள் கழிந்தாலும் 2011 உலக கோப்பை வெற்றி பசுமையாக அனைவரது மனங்களிலும் உள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்ததாக பாராட்டு தெரிவித்துள்ளது.

புகைப்படம் வெளியீடு
மேலும் 2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்வு எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 2011 உலக கோப்பை சாம்பியன்கள் என்று அப்போதைய அணி வீரர்கள் இணைந்துள்ள புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளது.


Click it and Unblock the Notifications