மீறப்பட்ட பயோ பபுள்.. ஆட்டத்திற்கு இடையே.. கோலியை நோக்கி சரசரவென ஓடி வந்த மர்ம நபர்.. பரபர சம்பவம்
அகமதாபாத்: இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய பவுலர்கள் நேற்று முழுக்க ஆதிக்கம் செலுத்தினார்கள்.
சிறப்பாக பவுலிங் செய்த அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

இங்கிலாந்து
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் வேகமாக தடுப்புகளை உடைத்துக்கொண்டு மைதானத்தில் இருந்த கோலியை நோக்கி ஓடி வந்தார்.

பேட்டிங்
கோலி அருகே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு வேகமாக அந்த மர்ம நபர் ஓடி வந்தார். நான் கோலியை சந்திப்பேன் என்று இவர் இணையத்தில் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கோலியை சந்திக்க தடுப்புகளை மீறி ஓடி வந்து இருக்கிறார்.

தவறு
ஆனால் இந்த நபரை பார்த்ததும் கோலி வேகமாக பின்னோக்கி சென்றார். அதோடு அந்த நபரிடம் அருகில் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். கோரோனா பயோ பபுள் விதிக்கு இது எதிரானது என்பதால் அந்த நபரிடம் கோலி இப்படி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஓடி வந்தார்
இதை புரிந்து கொண்ட அந்த இளைஞர் கோலியை தொடுவதற்கு முயற்சி செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அகமதாபாத் மைதானத்தின் திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் அரசியல் தலைவர்களை சந்தித்தனர்.

கொரோனா விதி
அவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை வாங்கினர். இந்த விழாவின் போது கொரோனா பயோ பபுள் விதிகள் மீறப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. இணையத்தில் இது தொடர்பாக பலரும் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications