காவி உடையில் இந்திய கிரிக்கெட் அணி… தந்தை பெரியார் வாழ்க… எட்ஜ்பாஸ்டனில் ஒலித்த தமிழனின் குரல்
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து, இந்தியா போட்டியின் போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ரசிகர் ஒருவர் ஏந்தி போட்டியை பார்த்த புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. முக்கியமான ஆட்டம் என்பதால் மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் குவிந்திருந்தனர். இங்கிலாந்து ரசிகர்களை விட அதிகமாக இந்திய ரசிகர்களின் ஆதிக்கமே மைதானத்தில் இருந்தது.
போட்டியின் போது மைதானத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இந்திய அணியை கைகளை தட்டியும், கரவொலி எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். மைதானத்திற்குள் இந்திய அணி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவி வண்ண உடையில் களம் இறங்கியிருந்தது.

விமர்சனங்கள்
அந்த உடை மீது பல விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் நெருக்கடியால் இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி உடை பூசப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. டுவிட்டரிலும் வார்த்தை போர் வெடித்தது. காவி ஜெர்சி நன்றாக இருந்தாலும், பிடித்தது என்னவோ நீல நிற ஜெர்சி என்று கேப்டன் கோலியும் கூறியிருந்தார்.

அசத்திய ரசிகர்
போட்டியின் போது ரசிகர் ஒருவர் செயல்கள் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்ததோடு, அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. அந்த ரசிகரின் பெயர் நஜிமுதீன் ஜஹபர் சாதிக் என்பதாகும். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

தந்தை பெரியார் வாழ்க
அவர் மைதானத்தில் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி நின்றார்.நஜிமுதீன் முழக்கத்திற்கு மற்ற தமிழ் ரசிகர்களும் கைத தட்டி குரல் எழுப்பினர்.
வைரலான வீடியோ
மைதானத்தில் எடுத்த புகைப்படத்தையும், வீடியோவையும் அவர் தமது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கமிட்ட வீடியோ இணையத்தில் ஏகத்துக்கும் ஹிட்டடித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications