அடங்கப்பா! அடி வாங்கி முகம் வீங்கிருச்சு.. ஆனா வீட்டுக்கு போகலை.. கெத்து காட்டிய கிரிக்கெட் ரசிகர்!
பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக்-கில் சிக்ஸரால் ஒரு ரசிகர் காயமடைந்தார்.
காயமடைந்த அந்த ரசிகர், தனக்கு தானே முதலுதவி செய்து கொண்டே மீண்டும் போட்டியை கண்டு ரசித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். என்ன தான் நடந்தது?

ஜிம்மி பியர்சன் சிக்ஸர் அடித்தார்
பிக் பாஷ் லீகில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் ஜிம்மி பியர்சன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவர் 17வது ஓவரில் எதிரணியின் ஜேம்ஸ் ஃபால்க்னர் வீசிய பந்தை சிக்ஸர் அடித்தார்.
ரசிகர் முகத்தில் காயம்
அந்த பந்து மேல் பகுதியில் அமர்ந்து இருந்த வயதான ரசிகரின் முகத்தின் ஒரு பகுதியில விழுந்தது. முதலில் மிரண்ட அந்த நபர், பின்னர் சுதாரித்தார். இந்த காட்சியை பிக் பாஷ் லீக்-கின் ட்விட்டர் பக்கம் வெளியிட்டது.

மீண்டும் வந்த ரசிகர்
உள் காயம் அடைந்த அந்த வயதான ரசிகர் பார்வையாளர் பகுதியில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஐஸ் பேக் மற்றும் குளிர்பானத்துடன் உள்ளே வந்த அந்த நபர் மீதி போட்டியை கண்டு ரசித்தார்.
இப்படி ஒரு ரசிகரா?
இதை வீடியோ எடுத்து மீண்டும் பிக் பாஷ் லீக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இப்படி ஒரு டி20 ரசிகரா என ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது அந்த நபரின் செயல்.


Click it and Unblock the Notifications