WATCH: இப்படியா உடம்பை வச்சிருக்கிறது? பொது இடத்தில் கேப்டனை வெச்சு செஞ்ச ரசிகர்…! வைரல் வீடியோ
லண்டன்: பொது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவின் உடலை கொச்சைப்படுத்தி ரசிகர் ஒருவர் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்த தொடர் மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஆடிய 5 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி மற்றும் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ரத்து என 3 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. எந்த தோல்வியையும் ஜீரணிக்கும் பாகிஸ்தான் ரசிகர்களால், இந்திய அணியுடனான தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ரசிகர்கள் விமர்சனம்
அதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அஹ்மது உடல் பருமன் குறித்தும் ரசிகர்கள் மிகவும் கிண்டலடித்துள்ளதன் தற்போது இணையத்தில் வைரலாக உருவெடுத்திருக்கிறது.
கேப்டனுக்கு அழைப்பு
இங்கிலாந்தில் உள்ள மால் ஒன்றிற்கு தனது குழந்தையுடன் சர்பிராஸ் அகமது சென்றிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்போது அவரை ரசிகர் ஒருவர், சர்பிராஸ் அகமதுவை அழைக்கிறார். தமது குழந்தையை தோளில் சுமந்தபடி இருக்கும் சர்பிராஸ் அகமது அங்கே வருகிறார்.

பன்றி போல உடம்பு
அவரிடம் அந்த ரசிகர், உங்களது உடல் மிகவும் பெருத்துள்ளது. தற்போது பன்றி போல உங்கள் உடல் அமைப்பு உள்ளது. உடலை குறைத்து போட்டிகளில் விளையாடுங்கள் என்று கிண்டல் செய்திருக்கிறார். ரசிகரின் இந்த பேச்சை கண்டு லேசாக அதிர்ச்சி அடைந்த சர்பிராஸ் அகமது பதில் ஏதேனும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

வீடியோ வைரல்
இந்த வீடியோவை கிண்டல் செய்த அந்த ரசிகரே, இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அடுத்ததாக, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஜூன் 23ம் தேதி பாகிஸ்தான் மோத இருக்கிறது. என்ன தான் இருந்தாலும் பொது இடத்தில் ஒரு விளையாட்டு வீரரை, அதுவும் ஒரு அணியின் கேப்டனை இப்படியா கிண்டல் செய்வது?


Click it and Unblock the Notifications