உலக கோப்பை நல்லாயிருக்கு.. ஆனா இவரு வர்ணனை தான் சரியில்ல..! ஐசிசியில் புகார் சொன்ன ரசிகர்
Recommended Video
லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு அணிக்கு சார்பாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேசி வருவதாக ரசிகர் ஒருவர் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள், தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகும் வர்ணனையாளர்களாக கிரிக்கெட்டிலேயே தொடர்ந்து இருக்கின்றனர். கிரிக்கெட்டில் இருந்த புகழை விட, வர்ணனை மூலம் புகழ் பெற்றவர்களும் உள்ளனர்.
அவர்களில் ஒருவர்... இந்தியாவின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையாளராக இருந்து வருகிறார். உலக கோப்பை தொடரில் ஐசிசி நியமித்த வர்ணனையாளர்களில் அவரும் ஒருவர். இந்தியாவிலிருந்து அவருடன் கங்குலி, ஹர்ஷா போக்லே ஆகிய மூவரும் உலக கோப்பை வர்ணனையாளர்களாக உள்ளனர்.

புகார் தெரிவித்த ரசிகர்
சர்வதேச கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும்போது ஒருதலைபட்சமாகவோ, தான் சார்ந்த நாட்டின் அணிக்காகவோ சாதகமாக பேசக்கூடாது. ஆனால், அதை மீறி வர்ணனையாளர் ஒருவர் செயல்பட்டிருக்கிறார் ஒருவர் என்று ஐசிசியிடம் ரசிகர் புகார் அளித்திருக்கிறார்.
கடிதம் அனுப்பினார்
அவர் புகார் சொல்லியிருப்பது , இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் மீது. இது தொடர்பாக அந்த ஆஸ்திரேலிய ரசிகர் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கர், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் நமது, நமக்காக என இந்திய அணியின் சார்பாக பேசியிருக்கிறார்.

வர்ணனை சரியில்லை
அதை கவனித்து, அதிருப்தி அடைந்த ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர், ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது வர்ணனை மட்டும் தான் சரியில்லை. மற்றபடி உலக கோப்பை சிறப்பாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இது புதிது கிடையாது
சஞ்சய் மஞ்சரேக்கர் ஐபிஎல்லின் போதும் மும்பை இந்தியன்சுக்கு சாதகமாகவே பேசியது சர்ச்சை எழுப்பியது. ஐபிஎல்லில் காட்டிய அந்த முறையை தற்போது, உலக கோப்பையிலும் தொடர்ந்திருக்கிறார்.

கிரிக்கெட் வல்லுநர்கள்
பிராந்திய மொழிகளில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்கள் சில நேரங்களில் குறிப்பிட்ட மொழி, மாநிலம் அல்லது நாடு சார்ந்த அணிக்கு சாதகமாக பேசுவது நடந்திருக்கிறது. ஆனால் உலகமே உற்று நோக்கும் ஆங்கில வர்ணனையில் ஒரு அணிக்கு சார்பாக பேசுவது சரியான செயல் அல்ல என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications