Recommended Video

2020 ஐபிஎல் நடக்காது
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் பங்கேற்க இருந்தார் தோனி. அதன் மூலம் 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற முயற்சித்து வருவதாகவும் ஒரு தகவல் வலம் வந்தது.

தோனி மீது விமர்சனம்
ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் இனி தன் பார்மை நிரூபித்து இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை என பலரும் கூறி வந்தனர். தோனியின் வயதையும் பலரும் சுட்டிக் காட்டினர்.

அந்த புகைப்படம்
இந்த நிலையில் தான் தோனி தன் பண்ணை வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் தோனி வெள்ளை தாடியுடன் காட்சி அளித்தார். தோனியா அது? என பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அந்த அளவுக்கு வயதான தோற்றத்தில் காட்சி அளித்தார்.

தோனிக்கு வயதாகி விட்டது
அந்த புகைப்படம் வெளியான நிலையில் "தோனி ஹேட்டர்ஸ்" சமூக வலைதளங்களில் தோனிக்கு வயதாகி விட்டது, அவர் ஓய்வு பெற வேண்டும் என கூறத் துவங்கினர். தோனி ரசிகர்கள் அந்த கருத்துக்களுக்கு பதில் கூறி வந்தனர்.

தோனி ரசிகர் கடிதம்
இந்த நிலையில் தோனி ரசிகர் ஒருவர் தோனி ஹேட்டர்ஸ் அவருக்கு வயதாகி விட்டது என கூறுவது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், தோனி மீண்டும் கிளீன் ஷேவ் செய்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

கஷ்டமாக உள்ளது
அந்த கடிதத்தில், தோனி நான் உங்களின் பெரிய ரசிகன். நீங்கள் ஆடுவதை பார்க்கவே சுவாசித்து வருகிறேன். உங்களின் ஏற்ற இறக்கத்தில் நான் உங்களுடனே பயணிக்கிறேன். உங்களின் புகைப்படம் வெளியானதில் இருந்து உங்களுக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற வேண்டும் என்கிறார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என அந்த ரசிகர் கூறி உள்ளார்.

வாயை அடைக்க வேண்டும்
மேலும், நீங்கள் தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன், நீங்கள் தான் சிறந்த கிரிக்கெட் வீரர், உங்களை சந்தேகப்படுபவர்களின் வாயை அடைக்க வேண்டும். தோனி, தயவு செய்து அந்த தாடியை ஷேவ் செய்து அழகான மஹியாக வாருங்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பகிரும் ரசிகர்கள்
தோனி ரசிகர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனி தாடியை ஷேவ் செய்யுங்கள் என பலரும் கூறி வருவது விசித்திரமான கோரிக்கையாகவும் உள்ளது. தோனி என்ன செய்யப் போகிறார் என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications