Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்சில் 'பெல்' அடிக்க வருமாறு சச்சின், வார்னேவுக்கு அழைப்பு

நியூயார்க்: நியூயார்க் பங்குச் சந்தையில், அன்றைய நாளின் வர்த்தகத்தின் தொடக்கமாக பெல் அடிக்கும் வழக்கம் உள்ளது. அதை சிறப்பு விருந்தினர்களை வைத்துச் செய்வார்கள். இந்த நிலைில் பெல் அடிக்க வருமாறு தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், ஷான் வார்னேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) பங்குச் சந்தையில் வர்த்தகத் தொடக்கமாக பெல் அடிக்க ஷான் வார்னேவும், சச்சினும் வரவுள்ளனர்.

இதுவரை கிரிக்கெட் பிரபலங்கள் யாரும் பெல் அடிக்க அழைக்கப்பட்டதில்லை. முதல் முறையா்க அந்தப் பெருமையை சச்சினும், வார்னேவும் பெற்றுள்ளனர்.

ஆல் ஸ்டார் கிரிக்கெட்

ஆல் ஸ்டார் கிரிக்கெட்

சச்சினும்., வார்னேவும் இணைந்து ஆல் ஸ்டார் கிரிக்கெட் லீக்கை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் வீரர்களைக் கொண்ட இந்த லீக் சார்பில் 3 டுவென்டி 20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டி நாளை

முதல் போட்டி நாளை

இதில் முதல் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் சார்பிலும் விளையாடும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பங்குச் சந்தை கெளரவம்

பங்குச் சந்தை கெளரவம்

இந்த நிலையில் நியூயார்க் பங்குச் சந்தையில் பெல் அடித்து வர்த்தகத்தைத் தொடங்கி வைக்க சச்சின், வார்னே அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இந்தப் பெருமையைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையில் உரை

பங்குச் சந்தையில் உரை

அதன் பின்னர் சச்சினும், வார்னேவும், ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் குறித்து விரிவாக விளக்கி்ப் பேசவுள்ளனர். பங்குச் சந்தை உறுப்பினர்களிடையே உரையாற்றவுள்ளனர்.

காலை 9.30 மணிக்கு

காலை 9.30 மணிக்கு

நியூயார்க் நேரப்படி காலை 9. 30 மணிக்கு பெல் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கும்.

Story first published: Friday, November 6, 2015, 12:11 [IST]
Other articles published on Nov 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+