Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் படுகொலை.. 3 பேர் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை!

Recommended Video

Rakesh pawar | மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொலை,போலீஸ் விசாரணை!- வீடியோ

மும்பை: மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை கிரிக்கெட் தேசம் என்று கூட சொல்லலாம். மற்ற விளையாட்டுக்களை விட இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் கிரிக்கெட் உலகில் அதிகமாக சம்பாதிக்கவும் முடியும்.

A former cricket player murdered in Mumbai

ஆனால் கிரிக்கெட் உலகில் எல்லோரும் வெற்றிபெற முடியாது. இங்கு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். பலர் கிரிக்கெட் துறையில் சாதிக்க முயற்சி செய்துவிட்டு, முடியாமல் வேறு துறைக்கு செல்வது வழக்கம்.

அப்படி கிரிக்கெட் துறையில் சாதிக்க முடியாமல், பின் கிரிக்கெட் பயிற்சியாளராக மாறியவர்தான் ராகேஷ் பன்வார். இவர் இந்திய ஏ அணிக்காக சில போட்டிகள் விளையாடி இருக்கிறார். அதேபோல் மஹாராஷ்டிரா ராஞ்சி அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

ராஞ்சி போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தவர், பின் ராஞ்சி வீரர்களை தேர்வு செய்வதற்காக பயிற்சியாளாராக மாறினார். கடந்த சில வருடங்களாக இவர் கிரிக்கெட் வீரர்களுக்கு, இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று மும்பையில் நடு இரவில் குத்திக் கொலை செய்யப்பட்டார். மூன்று பேர் சேர்ந்து இவரை படுகொலை செய்தனர். ராகேஷ் பன்வார் தனது காதலியுடன் வெளியே சென்றுவிட்டு வரும் போது மோசமாக படுகொலை செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள மஹாவீர் பெட்ரோல் நிலையம் அருகே இவர் கொலை செய்யப்பட்டார். மூன்று பேர் இவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பெண்ணும் கொலைகாரர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த பெண் மூன்று கொலை காரார்களையும் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் முழு நினைவு திரும்பிய பின் அவர் கொடுக்கும் அடையாளங்களை வைத்து கொலைகாரர்களை பிடிக்க போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை கொலைகாரர்கள் குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த கொலை ஏன் நடந்தது. இதற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 15:10 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+