For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை பைனலில் ஷாக் சம்பவம்..! மைதானத்துக்குள் திடீர் பரபரப்பு, தெறித்து ஓடிய பாதுகாவலர்கள்

லண்டன்: உலக கோப்பை பைனலில் பலத்த பாதுகாப்புடன் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலக கோப்பை இறுதியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மைதானத்துக்குள் பெண்

மைதானத்துக்குள் பெண்

இந்நிலையில் போட்டியின் இடையே ஒரு பெண்மணி அரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மைதானத்திற்குள் நுழைந்த அந்த பெண் சிறிது தூரம் ஓடிச் சென்றார்.

சிக்கினார் பெண்

பிறகு அதை கவனித்த மைதான காப்பாளர்கள், பிடித்து அழைத்துச் சென்றனர். இவ்வளவு தூரம் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த பெண் இப்படி ஓடியது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

சிறிது நேரத்திலேயே அந்த பெண் வெளியேற்றப்பட்டாலும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த பெண் ஓடியதற்கான காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

அதன்படி ஆபாச இணையதளம் ஒன்றில் விளம்பரத்திற்காக அந்த இணையதள முகவரியை ஆடையை அணிந்து, அதன் மூலம் விளம்பரத்தை செய்யவே மைதானத்திற்குள் ஓடி வந்ததாக தெரிகிறது. இதனைப் போன்று பல விளையாட்டுப் போட்டிகளில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

நீச்சல் உடையுடன் பெண்

நீச்சல் உடையுடன் பெண்

கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியின் போதும், இதே பெண் ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த, ஆபாச இணையதள பெயருடன் கூடிய நீச்சல் உடையுடன் மைதானத்தில் ஓடினார். இந்தச் சம்பவம் இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 15, 2019, 1:45 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
A lady interrupted during world cup final in Lords.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X