Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. டோணி பெயருக்கு பின்னால் இத்தனை "ஒளி வட்டங்களா"...!

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி கண்ட கேப்டன்களிலேயே மிகுந்த திறமைமிக்கவர் என்று புகழப்படும் எம்.எஸ்.டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் கண்ட டோணி, அதற்கடுத்த ஆண்டே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார்.

டோணியின் விஸ்வரூபத்தால் உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற புகழை கில்கிறிஸ்ட் இழந்தார், சிறந்த கேப்டன் என்ற அந்தஸ்தை ரிக்கி பாண்டிங் இழந்தார் என்று அவரது ரசிகர்கள் பெருமையாக கூறுவது உண்டு.

இந்திய அணிக்கு டோணியின் பங்களிப்பு அளப்பறியது. அதுகுறித்த ஒரு கழுகு பார்வை இதோ:

இந்திய கேப்டன்களில் முதல் முறையாக...

இந்திய கேப்டன்களில் முதல் முறையாக...

டோணி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 56.2 சதவீதமும், டெஸ்ட் போட்டிகளில் 45.76 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளது. டி20 போட்டிகளில் 26 வெற்றிகளை குவித்துள்ளார். இதற்கு முந்தைய எந்த ஒரு இந்திய கேப்டனும் செய்யாத சாதனை இது.

கேப்டன்ஷிப்பில் அரை சதம்

கேப்டன்ஷிப்பில் அரை சதம்

50 டெஸ்ட்டுகளுக்கும் மேல் இந்திய அணியை வழிநடத்திய ஒரே கேப்டன் மகேந்திர சிங் டோணிதான். அவர் மொத்தம் 59 டெஸ்டுகளில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சவுரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

டி20களில் நாங்கதான் கிங்

டி20களில் நாங்கதான் கிங்

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை (26 முறை) பெற்ற அணியின் கேப்டன் டோணி. இவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 20 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளார்.

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்

சர்வதேச ஒன்டே கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ஒருவர் அதிகபட்சமாக 183 ரன்கள் குவித்தார் என்றால் அந்த சாதனைக்கு சொந்தக்காரரும் டோணிதான். 2005ல் ஜெய்ப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் டோணி அந்த ரன்களை எடுத்தார்.

லேட்டா வந்து லேட்டஸ்டா சதம்

லேட்டா வந்து லேட்டஸ்டா சதம்

ஒன்டே போட்டியில் 7வதாக பேட்டிங்கில் இறங்கி சதம் அடித்த கேப்டன் டோணி மட்டுமே. 2012ல் சென்னையில் பாகி்ஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 125 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் டோணி.

டோணி கைகளில் சிக்கிய பேட்ஸ்மேன்கள்

டோணி கைகளில் சிக்கிய பேட்ஸ்மேன்கள்

இந்திய விக்கெட் கீப்பர்கள் வரலாற்றில் முதல்முறையாக, அதிகம் பேரை அவுட் செய்த சாதனை டோணியுடையது. டெஸ்டுகளில் 285, ஒருநாள் போட்டிகளில் 306, டி20 போட்டிகளில் 36 பேர் டோணியின் 'பொற்கரங்களில்' விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கீப்பர்களில் முதல் முறை

கீப்பர்களில் முதல் முறை

இந்திய கேப்டன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர்களேயே முதல்முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன் (224) குவித்ததும் டோணிதான். 2013ல் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை அவர் பதிவு செய்தார்.

குறைந்த பந்தில் நிறைந்த சதம்

குறைந்த பந்தில் நிறைந்த சதம்

இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே முதன்முறையாக, டெஸ்ட் போட்டியொன்றில், குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையும், குறைந்த பந்தில் சதம் அடித்ததில் உலக அளவில் 3வது பேட்ஸ்மேன் என்ற சாதனையும், கிடைத்தது 2006ல் டோணிக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் நடந்த டெஸ்ட்டில் 93 பந்துகளில் டோணி செஞ்சுரி போட்டார். அதுதான் டோணியின் முதல் டெஸ்ட் சதம் என்பது கூடுதல் சிறப்பு.

வெற்றி மீது, வெற்றி வந்து, என்னை சேரும்

வெற்றி மீது, வெற்றி வந்து, என்னை சேரும்

டோணி கேப்டனாகியதும், தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்கவேயில்லை. அதில் 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளிலும் டிராவும் ஆகியிருந்தது.

ஓட விட்டு பிடிப்போம்

ஓட விட்டு பிடிப்போம்

ஒன்டே போட்டிகளின்போது, இரண்டாவது பேட்டிங் செய்து எதிரணியின் ரன்னை விரட்டி பிடிப்பதில் இந்தியா தடுமாறிய காலம் உண்டு. எனவே டாசில் வெற்றி பெற்றால் பேட்டிங்தான் வேண்டும் என்று இந்திய அணி கேப்டன்கள் அடம் பிடிப்பார்கள். ஆனால் அந்த நிலையை தலைகீழாக மாற்றியது டோணிதான். ரன்னை விரட்டி பிடிப்பதில் இந்திய வீரர்களை நிபுணர்களாக மாற்றினார் டோணி. இரண்டாவது பேட்டிங் செய்த ஒருநாள் போட்டிகளில் டோணியின் சராசரி ரன் குவிப்பு 103 ஆக உள்ளது. அதில் 2 செஞ்சுரிகள், 14 அரை சதங்கள் அடங்கும்.

சங்ககாராவுக்கு செக்

சங்ககாராவுக்கு செக்

இலங்கையின் சங்ககாராவின் 133 ஸ்டம்பிங் சாதனையை, டோணி சமன் செய்துள்ளார்.

எல்லாமே எங்க கோட்டை

எல்லாமே எங்க கோட்டை

உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய மூவகை போட்டிகளிலும் சாம்பியனான அணிக்கு கேப்டனாக இருந்தவர் டோணிதான். 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற டோணி, 2009ல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

Story first published: Wednesday, December 31, 2014, 10:50 [IST]
Other articles published on Dec 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+